தமிழ் சினிமா நடிகரை கடத்தி கட்டாய திருமணமா? தந்தை புகாரால் பரபரப்பு
திருச்சி: சினிமா நடிகரை கடத்தி, திருமணம் செய்து வைத்ததாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக, ''தன்னை யாரும் கடத்தவும் இல்லை; கட்டாய திருமணம் செய்து வைக்கவும் இல்லை என அந்த நடிகர் தெரிவித்துள்ளார்.
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் மலையமான் என்ற 22 வயதாகும் நடிகர். 3 வருடங்கள் முன்பு வெளிவந்த கோலாகலம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம், மலையமானுக்கும், திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த அமுதா என்பவரின் மகள் தீபாவுக்கும் திருமணம் நடந்தது.
ஆனால், தன் மகனை, அமுதாவும், அவரது உறவினர்களும் கடத்தி, வீட்டு சிறையில் வைத்து காட்டாய திருமணம் செய்து விட்டனர் என, மலையமான் தந்தை போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், மலையமான் நிருபர்களிடம் கூறுகையில், யாரும் என்னை கடத்தவில்லை. என்னுடைய காதலுக்கு தடையாக இருந்தது, என் தந்தை. நானாக விரும்பிச் சென்று, காதலி தீபாவை திருமணம் செய்துள்ளேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய நான் ஒன்றும் குழந்தை இல்லை.
நானாக விரும்பி, காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளேன். அவருக்கும், எனக்கும் மூன்று வயது தான் வித்தியாசம். நான் இப்போது 'அரளிப்பூ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். என்னுடைய மனைவியை காப்பாற்றும் வகையில் வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications