நடிகர் ஜெகனின் கார் மோதி இளைஞர் பலி!
நடிகர் ஜெகனின் கார் மோதி வந்தவாசி அருகே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

வந்தவாசி: நடிகர் ஜெகனின் கார் மோதி வந்தவாசி அருகே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஜெகன் ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் வந்தவாசி வழியாக சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் தர்கா அருகே உள்ள தாழம்பள்ளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

ஜெகன் கார் மோதி இளைஞர் பலி
இதில் ஹுசைன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

ஜெகனின் கார் மோதி
ஹுசைன் மினி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஜெகனின் கார் மோதி உயிரிழந்தார்.

காவல்நிலையம் முற்றுகை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்துகள் அதிகரிப்பு
காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியில் விபத்துகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

20 பேர் பலி - கோரிக்கை
கடந்த 3 மாதத்தில் மட்டும் இந்த வழியில் நடந்த சாலை விபத்துகளில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications