கருணாநிதியின் மறைவு வரலாற்றின் முற்றுப்புள்ளி அல்ல, ஒரு கமா தான்: கமல்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல், தனது கட்சி நிர்வாகிகளுடன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை ராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலிக்காக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. பிற மாநில முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால், ராஜாஜி மஹாலே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிகிறது.

அந்தவகையில், மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல், கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "கருணாநிதியின் மறைவு வரலாற்றின் முற்றுப்புள்ளி அல்ல, ஒரு கமா தான். உணர்வும்,இந்த சூழலும் குரலை உயர்த்த முடியாத நிலைக்கு என்னை ஆளாக்கியுள்ளது. எனக்கும், கருணாநிதிக்கும் இடையேயான உறவு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. நாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கிருக்கிறது. அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்" என்றார்.
கமலுடன் ஸ்ரீபிரியா உள்ளிட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பலர் கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications