வருவேன்..வந்தே தீருவேன்... அரசியல் பிரவேசத்தை பிக்பாஸ் மேடையில் அதிரடியாக அறிவித்த நடிகர் கமல்ஹாசன்
அரசியலுக்கு வருவேன்....வந்தே தீருவேன்... என நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்.
சென்னை: அரசியலுக்கு தாம் வந்தே தீருவேன்' என நடிகர் கமல்ஹாசன் மிக ஆவேசமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே எபிசோடில் பேசிய கமல் அரசியலுக்கு தான் வருவது உறுதி என்பதை மிக தீர்க்கமாகவும் ஆவேசமாகவும் குறிப்பிட்டார். அப்போது வேட்டி, சட்டை அணிந்திருந்த கமல் பிக்பாஸ் போட்டியாளார்கள் மேடையில் அமர்ந்திருக்க பேசியதாவது:
''என்னை இதுவரை பேச அனுமதித்த ஆறரை கோடி மக்களுக்கு நன்றி. இந்த ஆறரை கோடி எட்டு கோடியாக மாற வேண்டும் என்பது என் பேராசை. அதை நிகழ்த்திக் காட்ட ஊக்கியாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இது முடிவு அல்ல தொடக்கம்.

வருவேன். வந்தே தீருவேன்
இங்கே, இந்த பிக்பாஸ் மேடையில் தொடங்கியிருக்கிறேன். தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கு வருவேன். வந்தே தீருவேன்.

தொண்டர் அடிப்பொடி
வருவேன் வருவேன் என்று கூறுகிறேனே. என்னவாக வருவேன் என்று கேட்காதீர்கள். தொண்டர் அடிப்பொடியாக வருவேன். ஆசையில் வருவதல்ல. அன்பில் வருகிறேன். வெறும் ஆர்வத்தில் வருவதல்ல. கடமையுடன் வருகிறேன். இந்தன்பு அங்கும் கிடைக்கும் என்ற அச்சாரம் கிடைத்துவிட்டது.

நீங்கள் சொல்வதைக் கேட்பேன்
இனி என்ன வேலை என்று கேட்க மாட்டேன். இனி உங்கள் வேலை தான் என் வாழ்வு; கடமை; சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னால் சினிமாவில் நடிக்கிறேன். இல்லையென்றால், 'உனக்கு கொடுத்த வேலையை பாரு' என்றால் சேவகம் செய்கிறேன்.

'அவருக்கும்' சேவை செய்ய தயார்
இதற்கு நீ லாயக்கு இல்லை. நனக்கள் வேற ஆள் பார்த்துக்கொள்கிறோம் என்றால் நன்றி. 'அவருக்கு' ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் அதையும் செய்கிறேன். இதை கைதட்டலுக்காகச் சொல்லவில்லை. என் மனதின் அடியாழத்திலிருந்து வரும் வார்த்தை.

எது நல்ல முடிவு?
எனக்கு வேண்டிய வளத்தை, பணத்தை, சுகத்தை நீங்கள் எனக்குக் கொடுத்துவிட்டீர்கள். அதற்கு நன்றி சொல்ல என் வாழ்நாள் போதாது. அதற்கு கைமாறு செய்ய எது செய்தாலும் அது போதாது. உங்கள் சேவையில் சாவது தான் இந்த கலைஞனுக்கு நல்ல முடிவு.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications