தயவு செய்து இனியும் இவரை யாரும் "மைக்" மோகன்னு கிண்டலா கூப்பிடாதீங்க..!
சென்னை: சென்னை மழை வெள்ளம் நமக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. கற்றுக் கொண்டோமா என்றுதான் தெரியவில்லை. நாமெல்லாம் மறந்து போய் விட்ட பலர் நம்மை மறக்காமல் நமக்காக ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டிய அரிய செயல்களலெல்லாம் சென்னையில் இந்த மழைக்காலத்தில் நடந்தேறியது.
நடிகர் மோகன் அதில் ஒருவர். நாமெல்லாம் கிட்டத்தட்ட இவரை மறந்து விட்டோம். அவரும் கூட அமைதியாக ஒதுங்கி விட்டோம். ஆனால் வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் தத்தளித்தபோது ஓடி வந்து உதவி செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார் மோகன்.
இவர் வந்தாலும் வராவிட்டாலும் யாரும் கேட்டிருக்கப் போவதில்லை. இருந்தாலும் அவராகவே வந்து அருமையாக உதவி விட்டுப் போயுள்ளார் மோகன்.

மக்களைக் கவர்ந்த நடிகர்கள்
வெள்ள நிவாரணப் பணிகளில் சில நடிகர்களும், சில பிரபலங்களும் உண்மையிலேயே அசத்தி விட்டனர். யாரும் எதிர்பாராத வகையில் குட்டி அரசுகள் போல மாறி அவர்கள் செய்த காரியம் அப்பப்பா ஆயுள் உள்ளவரைக்கும் சென்னை மக்கள் மறக்க மாட்டார்கள்.

சித்தார்த் - பாலாஜி
வெள்ள நிவாரணப் பணிகளில் முதலில் களத்தில் குதித்தவர்கள் நடிகர் சித்தார்த்தும், ஆர்ஜே பாலாஜியும்தான். அதேபோல மயில்சாமி உள்ளிட்டோரும் நிவாரணப் பணிகளில் சத்தமின்றி அசத்தினர்.

மோகன்
இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு நடிகர் மோகன். தமிழ் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். ரஜினி, கமலுக்கு இணையான பிரபலத்துடன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

மறந்து போச்சு
காலமும், வயதும் ஓடிப் போனதால் மோகன் மார்க்கெட்டும் மங்கிப் போனது. உருவம் படத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார். ஆனால் படம் ஓடவில்லை. சுட்ட பழம் படத்தோடு தமிழ் அவருக்கு குட்பை சொல்லி விட்டது. அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது.

கள்ள ஓட்டுக்குப் பலியானவர்
சமீபத்தில் கூட நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப் போட வந்தார். ஆனால் அவரது ஓட்டை யாரோ போட்டு விட்டதாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இந்த நிலையில் சென்னை மக்களுக்கு கை கொடுக்க ஓடி வந்தார் மோகன்.

வெள்ள நிவாரண உதவி
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிக்கு விசிட் அடித்த மோகன் அங்கு தன்னால் ஆன உ்தவிகளைச் செய்தது மக்களை நெகிழ வைத்தது. ஏங்க உதவி செய்யலை என்று யாரும் கேட்க முடியாது.. ஆனாலும் அவராகவே வந்து நம் கண்களைத் துடைத்துச் சென்ற அந்த செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது.
இனிமேலும் யாரும் அவரை மைக் மோகன்னு கிண்டலா கூப்பிடாதீங்கப்பா.. !
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications