சென்னையில் மாயமாகும் பச்சிளம் குழந்தைகள்... நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் பார்த்திபன் புகார் !
சென்னை: சாலையோரம் வசிக்கும் மக்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம், நடிகர் பார்த்திபன் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னையில் சாலையோரம் வசிப்போரின் குழந்தைகள் காணாமல் போவது தொடர் கதையாகி வருவதாக தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 30 நாட்களில் 2 கைக் குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சாலையோரம் வசிப்போர் வேலைக்கு சென்றுவிடும்போது, அவர்களது குழந்தைகள் பாதுகாப்பின்றி விடப்படுவதாகவும், இதனால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், செய்தித்தாள்களில் நிறைய செய்திகள் இருக்கும் அதில் சில செய்திகள் சிலரை பாதிக்கும். என்னையும், லதா ரஜினிகாந்தையும் தெருவோர குழந்தைகள் காணாமல் போவது குறித்த செய்தி மிகவும் பாதித்தது. இதில் கொஞ்சம் அவசர நடவடிக்கையாக கவனம் செலுத்துமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறோம்.
இந்த இடத்தில் தனித்து போட்டியிடமால் கூட்டணியாக போட்டியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். பார்த்திபன் மனிதநேய மன்றம், லதா ரஜினிகாந்தின் தயா ஃபவுண்டேஷன், எக்ஸ்நோரா நிர்மல் மற்றும் இன்னும் பல என்ஜிஓ-கள் இணைந்து இதற்கான ஒரு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று இணைந்து இருக்கிறோம்.
இது குறித்து முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம் "அம்மா குழந்தைகள் நல காப்பகம்" என்று தொடங்கலாம் என்று கேட்டு இருக்கிறோம் என்றார். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக, காவல் ஆணையர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications