பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் நோட்டீஸ்
சமூக வலைதளத்தில் தன்னைப்பற்றி தவறாக பேசிய பாஜக எம்.பிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சட்ட நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை: சமூக வலைதளத்தில் தன்னைப்பற்றி தவறாக பேசிய பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சட்ட நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில் தன்னைப்பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும்படி பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரகாஷ் ராஜ் கவுரி லங்கேஷ் மரணம் குறித்து தனது ஆற்றாமையை டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் சிறந்த நடிகர் என்று குறிப்பிட்டு இருந்தார். கவுரி லங்கேஷ் மரணத்தில் மோடி மவுனமாக இருந்ததால் அவர் இப்படி குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மிகவும் மோசகமாக சில டிவிட்களை செய்து இருந்தார். அதில் அவர் பிரகாஷ் ராஜையும் அவரது குடும்பத்தையும் மிகவும் தவறாக பேசி இருந்தார். பின் அதை நீக்கிவிட்டார்.
தற்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி பிரகாஷ்ராஜ், பிரதாப் சிம்ஹாவிற்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். மேலும் அந்த நோட்டிசில் தன்னிடம் மன்னிப்பு கேட்கும்படியும் கூறியுள்ளார்.
நோட்டிஸுக்கு சரியான விளக்கம் அளிக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications