பல்லிளிக்கிறது உங்களது கீழ் புத்தி.. எச். ராஜா மீது நடிகர் பிரசன்னா கடும் தாக்கு!
நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்று பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா குறிப்பிட்டதற்கு நடிகர் பிரசன்னா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்று டுவீட்டிய எச். ராஜாவிற்கு பதில் டுவீட்டில் விளாசித் தள்ளியுள்ளார் நடிகர் பிரசன்னா.
மெர்சல் பட வசனத்தை நீக்கக் கோரி அனைத்துத் தரப்பிலும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது பாஜக. பாஜகவிற்கு எதிரான கருத்து என்றால் சகட்டு மேனிக்கு வார்த்தைகளை அவிழ்த்து விடும் எச். ராஜா இந்த முறையும் விஜயை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு சர்ச்சைக்கு வித்திட்டார்.
மெர்சல் சர்ச்சை ஒருபுறம் என்றால் எச்.ராஜா டுவீட் சர்ச்சை மறுபுறம் என்று பாஜக இரண்டு பக்கமும் அடி வாங்கும் மத்தளமாக இருக்கிறது. எச்.ராஜாவின் கருத்துகளுக்கு பதில் டுவீட்டுகளும் மீம்ஸ்களும் பறக்கின்றன.
|
விளாசித் தள்ளும் பிரசன்னா
இந்நிலையில் எச். ராஜா டுவீட்டுக்கு நடிகர் பிரசன்னா பதில் டுவீட்டை தெறிக்க விட்டிருக்கிறார். பாஜகவுக்கு முதல் எதிரி நீங்களும் உங்கள் மாநிலத் தலைவரும்தான். இருப்பை காட்டிக்கொள்ள பிதற்றாதீர். பல்லிளிக்கிறது உங்கள் கீழ்புத்தி என்று தமிழில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
|
கண்டிக்கும் உரிமை உள்ளது
மெர்சல் படத்தை நான் பார்க்கவில்லை அதனால் அதில் என்ன இடம்பெற்றிருக்கிறது என்ற விஷயத்திற்குள் போக விரும்பவில்லை. ஆனால் ஒரு அரசியல் தலைவர் மக்களை மதத்தின் பெயரோடு இணைத்து பேசுவதை கண்டிக்கும் உரிமை எனக்கு உள்ளது. இதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என்று மற்றொரு டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
|
எரிச்சலூட்டும் தலைவர் வேண்டாம்
இது போன்ற கருத்துகளை கூறி விட்டு பாஜக மைனாரிட்டி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெற்றி பெற முடியம் என்று நினைக்கிறீர்களா. எங்களுக்கு எரிச்சலூட்டுகிற தலைவனை விட செயல்திறனோடு செயலாற்றும் தலைவன் தான் வேண்டும். விரைவில் எங்கள் நம்பிக்கைக்குரிய ஒரு தலைவர் கிடைப்பார்.
|
பிரிவினைவாதத்தை தூண்டுகின்றனர்
ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடி ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றி பேசுகிறார். ஆனால் அதே சமயம் அவருடைய கட்சியினர் பிரிவினைவாதம் பற்றி பேசுகின்றனர். இதில் எந்த தெளிவையும் பெற முடியவில்லையே












Click it and Unblock the Notifications