ஜெ. செத்துட்டாங்க, அதிமுக இனி இல்லை.. அதனால் திமுகவில் இணைந்தேன்.. ராதாரவி
நடிகர் ராதாரவி இன்று திமுகவில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான் என்று தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவில் இருந்த நடிகர் ராதாரவி இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடும்பத்திற்குள் வந்தது போல உள்ளதாக கூறினார். இப்போது அதிமுகவே இல்லை என்று கூறிய அவர், மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என்றார்.
நான் நம்பி போன அம்மா இறந்து விட்டதாக கூறிய அவர், இப்போது ஜெயலலிதாவை தேடி வந்ததாக கூறியுள்ளார். இப்போது எதிர்கட்சியான உள்ள திமுக விரைவில் ஆளுங்கட்சியாக ஆட்சியில் அமரும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது தலைவர்கள் யாரும் இல்லை என்றும் தகுதி படைத்த ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே என்றும் ராதாரவி தெரிவித்தார்.
திரைப்படங்களில் ஹீரோ,வில்லன்,குணச்சித்திர வேடங்களில் நடித்த ராதாரவி முதலில் திமுகவில் மிக தீவிரமாக செயல்பட்டவர். ஒருகட்டத்தில் திமுகவிலிருந்து விலகி அதிமுக.,வில் சேர்ந்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ பதவியும் வகித்தார். சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தற்போது அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. இதையடுத்து தற்போது திமுகவில் இணைந்துள்ளார் ராதாரவி.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications