குருவை மிஞ்சிய சிஷ்யன்: சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்காக நடிகர், நடிகைகள் வெள்ள நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.10 லட்சம் அளித்துள்ளார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடி ரூபாய் உதவி நடிகர் லாரன்ஸ் @im_raghava
— Raghava Lawrence (@im_raghava) December 3, 2015 சித்தார்த் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். மம்மூட்டி சென்னையில் உள்ள தனது மற்றும் தனது உறவினர் வீடுகளை பாதிக்கப்பட்ட மக்கள் தங்க திறந்துவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் பணம் தவிர வேறு வகைகளிலும் உதவி செய்து வருகிறார். ராகவா லாரன்ஸ் ஒரு அறக்கட்டளை வைத்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டான நேரத்தில் சென்னை மக்களுக்கு பலரும் உதவி செய்வது பாராட்டுக்குரியது.












Click it and Unblock the Notifications