நமக்குள் எப்போது சண்டை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.. ரஜினிகாந்த்
Recommended Video

சென்னை : ஒற்றுமை, ஒழுக்கம்,கட்டுப்பாடுடன் இருந்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் எப்போது சண்டை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ்கார்டனில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ரசிகர்களிடம் பேசினார். ரஜினி காணொலியில் பேசியது ராகவேந்திரா திருமண மண்டபம் உள்பட ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பட்டது.
மக்கள் மன்ற ரசிகர்களிடம் காணொலி மூலம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது : நாம் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று அனைவரிடமும் நிரூபித்துக் காட்ட வேண்டும். இது ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு அதை நாம் பயன்படுத்திக் கொண்ண வேண்டும்.

குடும்பத்தை கவனியுங்கள்
உங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள், அவர்களை விட்டு விட்டு வந்து மக்கள்பணி செய்யுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். எண்ணங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளுடன் கூடுதலாக ஒரு பொறுப்பு இது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

சண்டை வருமா என காத்திருக்கின்றனர்
எல்லோரும் நமக்குள் எப்போது சண்டை வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்தால் போதும் மற்றவற்றை ஆண்டவன் பார்த்துக் கொள்வான்.

ஒத்துழைப்பு தாருங்கள்
இந்த புதிய பயணத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை இதை மட்டும் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ரஜினி பேசியுள்ளார்.

காலையில் ரசிகர்களுடன் பேச்சு
காவிரி நீர் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் காலையில் ரசிகர்களுடன் காணொலி காட்சி மூலம் ரஜினி பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் செய்யவரும் ரஜினி, காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு இழப்பும் கர்நாடகாவிற்கு சாதகமான தீர்ப்பும் வந்த நிலையில் ரஜினி இதுவரை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications