தலைவர் இப்பவாவது அரசியலில் புகுவாரா.. ரஜினி ரசிகர்கள் உற்சாக எதிர்பார்ப்பு!
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக ரசிகர் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது .
Recommended Video

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 26ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கடந்த 12ம் தேதி கொண்டாடப்பட்டது . ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களை தொடர்ந்து தனது கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திப்பதை வழக்கமாக வைத்து இருந்தார்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்கவில்லை. மேலும், அரசியலுக்கு வரும் அறிவிப்பு குறித்து வெளிப்படையாக எந்த அறிவிப்பும் செய்யாமல் இருந்ததால் அவரது ரசிகர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.

ரஜினி ரசிகர்கள் ஆர்வம்
தொடர்ந்து பல ஆண்டுகளாக் ரசிகர்களை சந்திக்காமல் இமயமலை சென்று வந்த ரஜினி. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, தனதூ ரசிகர்களின் பிரார்த்தனையே தன்னை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், ரசிகர்களிடத்தில் பேசும் போது அரசியலுக்கான தேவை வந்திருப்பதாகவும், ஆனால் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றும் சொல்லி இருந்தார்.

எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்
இந்நிலையில், பிறந்த நாள் அன்று ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானதால், கடந்த 12ம் தேதி பிறந்தநாளில் அவர் அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன்னும், ராகவேந்திரா திருமணமண்டபம் முன்பும் குவிந்து இருந்தனர். ஆனால், அன்று ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கவில்லை. இதனால் மாலை வரை அவருக்காக காத்திருந்து ஏராளமானோர் மனம் சோர்ந்து போயினர்.

ரசிகர் மன்றம் அறிவிப்பு
இந்நிலையில், ரஜினி மீண்டும் வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காலை எட்டு மணி முதல் மாலை மூன்று மணி வரை நடக்கும் இந்த சந்திப்பில், தினமும் சுமார் 1000க்கும் அதிகமான ரசிகர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வருவார்கள் என்பதால் ரசிகர் மன்றம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது.

அரசியல் குறித்த அறிவிப்பு
இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆர்.கே நகர் தேர்தலுக்கு பிறகு இந்த சந்திப்பு நிகழ இருப்பதால், கண்டிப்பாக இந்த முறை ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். நிச்சயம் புத்தாண்டில் தங்களுடைய தலைவர் ரஜினி அரசியலில் களம் காண்பார் என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications