அதிமுக வேலுமணி வீட்டுக்கு ரஜினிகாந்த் விசிட்.. புதுமண தம்பதிகளுக்கு தந்த கிஃப்ட் தான் ஹைலைட்
சென்னை: அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென சென்று, அண்மையில் திருமணம் நடைபெற்ற எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸ்- தீஷனா தம்பதியினரை வாழ்த்தினார்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தவர் எஸ்பி வேலுமணி. அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்பி வேலுமணியின் கை, மேற்கு மாவட்டங்களில் ஓங்கி இருந்தது. பல்வேறு அரசியல் சார்ந்த சர்சைகளில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறார் எஸ்பி வேலுமணி.

எஸ்பி வேலுமணியின் மகன் விகாஸ்- தீஷனா திருமணம் அண்மையில் கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவிர அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் சென்றிருந்தனர். அதேபோல பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கு முன்னரே இரு கட்சிகளின் தலைவர்களும் எஸ்பி வேலுமணி இல்லத்தில் கூடி மகிழ்ந்து பேசியது ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்தன. பின்னர் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கைகளை உரிமையுடன் பிடித்தபடி மணமக்களை வாழ்த்து சொல்ல வைத்தார் எஸ்பி வேலுமணி. இது அதிமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த பின்னணியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள எஸ்பி வேலுமணி இல்லத்துக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென சென்றார். ரஜினிகாந்தை எஸ்பி வேலுமணி குடும்பத்தினர் உற்சாகமாக பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ரஜினிகாந்துக்கு தமது குடும்பத்தினர் அனைவரையும் எஸ்பி வேலுமணி அறிமுகப்படுத்தினார். இந்த சந்திப்பின் போது புதுமண தம்பதிகளான விஜய் விகாஸ்- தீஷனா தம்பதியினரை ரஜினிகாந்த் வாழ்த்தினார். அத்துடன் புதுமண தம்பதிகளுக்கு தாம் போற்றி வணங்கும் குருஜி 'பாபா'வின் படத்தை தமது அன்பளிப்பாகவும் நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். எஸ்பி வேலுமணி குடும்பத்தினருடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் ரஜினிகாந்த் விடைபெற்றுச் சென்றார்.
எங்களது மகன் V.விஜய் விகாஸ் - C.T.தீக்ஷணா இணையரின் திருமணம் அண்மையில் நடைபெற்றதையடுத்து, சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் எங்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். pic.twitter.com/0V2CB29vgA
— SP Velumani - SayYEStoWomenSafety & AIADMK (@SPVelumanicbe) April 29, 2025
இது தொடர்பாக எஸ்பி வேலுமணி தமது எக்ஸ் பக்கத்தில், எங்களது மகன் V.விஜய் விகாஸ் - C.T.தீக்ஷணா இணையரின் திருமணம் அண்மையில் நடைபெற்றதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவர்கள் எங்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார் என பதிவிட்டுள்ளார்.
-
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
எஸ்.பி.வேலுமணியிடம் சீறிப்பாய்ந்த சி.வி.சண்முகம்.. எல்லா பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம்! -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications