காட்டுக்குள் கடத்தி சென்ற வீரப்பனை பற்றி நெகிழ்ந்த ராஜ்குமார்.. வீடியோவில் சொன்னது என்ன?
Recommended Video

ஈரோடு: வீரப்பன் என்னை அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்கிறார் என்று நக்கீரன் கோபாலிடம் அளித்த கேசட்டில் நடிகர் ராஜ்குமார் கூறியிருந்தார்.
2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெங்களூரில் இருந்து தாளவாடி அருகே, மனைவி பார்வதம்மாவுடன் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் மற்றும் அவர் கூட்டாளிகளால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
108 நாட்களுக்கு மேல் வனத்தில் வைத்திருந்து பிறகு விடுதலை செய்ததாகவும் வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது கோபி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று இன்று நீதிபதி மணி தீர்ப்பு வழங்கினார்.
இதனிடையே அரசு சார்பில் வீரப்பனிடம் தூது சென்ற நக்கீரன் கோபாலிடம் ராஜ்குமார் பேசிய வீடியோ கேசட் கொடுத்து அனுப்பப்பட்டது. அந்த கேசட்டில், ராஜ்குமார் உருக்கமாக பேசியிருந்தார்.

வீடியோ கேசட்
மொத்தம் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தக் கேசட்டில் ராஜ்குமார், கோபால் நடுவேயான உரையாடலும் பதிவாகியிருந்தது. ராஜ்குமார் கூறுகையில், காஜனூர் பண்ணை வீட்டில இருந்தோம். அப்போ அடையாளம் தெரியாத சிலர் வந்து யார் ராஜ்குமார்ன்னு கேட்டாங்க. நான் முதலில் வருமானவரி அதிகாரிகள் என்று நினைத்தேன். பெரிய மீசையைப் பார்த்தப்புறம் தான் வீரப்பன்னு தெரிஞ்சது.

நானே வருகிறேன்
யாரையும் எதுவும் செஞ்சுடாதே வீரப்பா. நானே வந்து விடுகிறேன் என்று சொன்னேன். என் மனைவி வருத்தம் அடைந்தார். யாரும் சத்தம் போடவேண்டாம் என்றேன். அப்போது என்னுடன் இருந்த இவர்களையும் (அருகே இருந்தவர்களை காட்டுகிறார்) வீரப்பன் கடத்திக் கொண்டு வந்தார். நான் கடத்தப்பட்டதை ஒரு விபத்தாகக் கருதுகிறேன். ரசிகர்களும், வீட்டிலிருப்பவர்களும் கவலைப்படுவது சகஜம்தான். என்னை டெலிவிஷன் மூலம்பார்த்தால் அவர்களுக்கு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்கும்.

நிம்மதியாக இருங்கள்
நான் காட்டில் நலமுடன் இருக்கிறேன். நான் இங்கே நிம்மதியாக இருப்பது போல் நீங்கள் அங்கே நிம்மதியாக இருங்கள். ரசிகர்களுக்கு துக்கம் ஏற்பட்டுஇருப்பதும், தொந்தரவு ஏற்பட்டு இருப்பதும் சகஜம்தான். என்றாலும் அன்பு, பாசம் என்பவை நிலையானவை. உங்கள் அன்பினால் நான் கண்டிப்பாக நலமுடன் வந்து சேர்வேன்.

கவலை வேண்டாம்
வீரப்பன் என்னை மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்கிறார். இரண்டு மாநில முதல்வர்களும் வீரப்பனின் கோரிக்கைகளைபரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு தாய் ராஜராஜேஸ்வரி கருணை காட்ட வேண்டும். என் மனைவி மற்றும் எங்கள் உறவினர்கள் ரேடியோவில் பேசியதைக் கேட்டேன். அவர்களுக்கு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம். நான் உங்களைஎல்லாம் பார்க்க வருவேன். எனக்கு இது வாழ்வில் தேவையான அனுபவமாகத்தான் இருந்தது. யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.

தமிழர்கள் பாதுகாப்பு
ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், அப்படி ஏதும் நடக்காமல் இருக்க ராஜ்குமார் பேசிய இந்த கேசட்டும், விடுதலையான பிறகு, அவர் கன்னட அமைப்பினரை கட்டுப்படுத்தியதும் முக்கிய காரணங்களாகும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications