நீதியை நம்பும் மக்கள்... நீதித்துறை கெட்டுப்போனால் நாடு முன்னேறாது... ரஜினிகாந்த் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை : நீதித்துறை கெட்டுப்போனால் நாடு முன்னேற்றம் அடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டுவிழா நடைபெற்றது. தபால் தலையை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நீதித்துறையை நம்பித்தான் நாடு இருக்கிறது. அரசியல்வாதிகள், மக்களை மாற்றி விடலாம். ஆனால் நீதித்துறை கெட்டுப்போனால், நாடு முன்னேற முடியாது என தெரிவித்தார். நீதித்துறையை நம்பித்தான் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications