நான் நல்லா இருக்கேன்.. மதுரைல இருக்கேன்... ‘நெஞ்சுவலி’ வதந்தி குறித்து ராமராஜன் விளக்கம்
நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் வதந்தி எனத் தெரிய வந்துள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் மனக் கவலையடைந்த நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி எனத் தெரிய வந்துள்ளது.
தமிழின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். பின்னர் அவர் அரசியலில் குதித்தார். கடந்த 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ராமராஜன் எம்.பி., ஆனார். தொடர்ந்து அதிமுகவில் அவர் உறுப்பினராக உள்ளார்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனால் பெரும் மனக்கவலையில் இருந்த ராமராஜனுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது முன்னாள் மனைவி நளினி அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டது.
இந்தத் தகவலால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். ராமராஜன் மற்றும் நளினிக்கு அவர்கள் போன் போட்டு விசாரிக்கத் தொடங்கினர். அப்போது தான் இது வதந்தி என்பது தெரிய வந்தது.
அதாவது ராமராஜன் தற்போது ஆரோக்கியமாக உள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக தற்போது அவர் மதுரை சென்றுள்ளாராம்.
அவ்வப்போது இது போன்று பிரபலங்கள் சிலருக்கு உடல்நலக் குறைவு அல்லது மரணம் என சமூகவலைதளங்களில் வதந்தி பரப்புவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்தவகையில் தற்போது ராமராஜன் அந்த வதந்தியில் சிக்கியுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராமராஜன். இந்தத் தம்பதிக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து செய்து கொண்ட ராமராஜனும், நளினியும் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications