பாமக துணை தலைவராக நடிகர் ரஞ்சித் நியமனம்.. ராமதாஸ் அறிவிப்பு
Recommended Video

சென்னை: நடிகர் ரஞ்சித் பாமகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1993ம் ஆண்டு வெளியான பொன்விலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார்.
மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஏழையின் சிரிப்பில், என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.
பின்னர் திரை வாய்ப்புகள் இன்றி ஓய்வில் இருந்தார். இதையடுத்து, நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய, அதிமுக கட்சியில் இணைந்து, அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராகவும் வலம் வந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணியாக பிரிந்தது. அப்போது ஓபிஎஸ் அணியினருக்கு ரஞ்சித் ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன், பன்னீர்செல்வம் அணி இணைந்த பிறகு, அதிமுகவில் ஈடுபாட்டை குறைத்துக்கொண்டார் ரஞ்சித். இந்த நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி, ரஞ்சித், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்தார்.
இந்த நிலையில், பாமக துணை தலைவராக ரஞ்சித்தை நியமித்து ராமதாஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர்களின் அரசியல் வருகையை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பாமகவின் துணை தலைவராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளது, முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications