என்னாது ராவணன் நம் முப்பாட்டனா! அப்புறம் நான் ஏதாவது சொல்லிட போறேங்க? கொதித்த நடிகர் ரஞ்சித்
திருப்பூர்: திருப்பூரில் நடந்த அயோத்தி ராமர் பிரதிஷ்டை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் பங்கேற்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அங்கு பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை காண 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். அது போல் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த விஷயத்தில் நேரடியாக பங்கு பெற முடியாதவர்கள் வீடுகளிலேயே நேரலையை பார்த்து ரசித்தனர்.

அது போல் பொது இடங்களில் பெரிய திரை வைக்கப்பட்டு அதில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில் திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் பெரிய திரை மூலம் அயோத்தி ராமர் பிரதிஷ்டையை கண்டு களித்தனர்.
முன்னதாக அந்த வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலைக்கு சிறப்பு பூஜையும் ராமர் பஜனையும் நடந்தது. இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்து முன்னணி நிர்வாகிகள் திரைப்பட நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதையடுத்து நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் (நேற்று) பெருமை வாய்ந்த தினம். உலகில் இருக்கும் அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. 500 ஆண்டுகால போராட்டம். அதன் வரலாறு என்னவென உங்களுக்கு தெரியும். இது நம் மண்ணின் ஆதாரம். இந்து மதத்திற்கு முதன்மை கடவுள் ராமர். இது நம்ம பூமி அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
காவல் துறையை வைத்து தடுத்தாலும் மின்சாரத்தை துண்டித்தாலும் நாம் விடும் மூச்சுக்காற்று நம் சாமிதான். அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த போராட்டம், அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த பூமி இருக்கிறது. புண்ணிய பூமியில் கைகூலித்தனமான செயல்கள் எல்லாம் கண்டிக்கத்தக்கது!
இறக்குமதி செய்யப்பட்ட சாமி சிலை இல்லை. இது என் தாய் உணர்வு, கடவுளுக்கு எல்லை இல்லை. இந்து மதத்திற்குள் பிரிவினை செய்ய சில தீயசக்திகளும் இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள். சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதம் இந்து மதம்.
அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள்தான் என்றார். அது போல் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் செய்தியாளரை சந்தித்தார். அவர் கூறுகையில் 500 ஆண்டு காலம் போராடி வெற்றி விழா நடைபெறுகிறது. உலகம் முழுவதும் ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள்.
நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. ராமரின் விளையாட்டு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் ராமர் பாடம் புகட்டுவார் என கூறியிருந்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications