விஜய் உடன் பாஜக கூட்டணி வைக்காது.. நடிகர் சரத்குமார் பரபரப்பு பேட்டி
சென்னை: விஜய் உடன் பாஜக கூட்டணி வைக்காது.. கூட்டம் கூடுவதெல்லாம் வாக்காக மாறி இருந்தால் நான் பரப்புரை செய்தவர்கள் தான் வெற்றி பெற்றிருந்திருப்பார்கள்.. பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டிற்கு நல்லது என்பதை உணர்ந்தாலே போதும். இந்தியா உலக அரங்கில் முதலிடத்திற்கு முன்னேறும் என்று நடிகரும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பேசினார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சிம்சோன் கபடி குழு நடத்திய 21 ஆவது ஆண்டு கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், "100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களுக்கு அதிகப்படுத்தினால் அதற்கும் திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். எந்த திட்டத்துக்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவது கிடையாது.
தென்காசி சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு எடுக்க வேண்டும். அதன் பின்னர் நான் போட்டியிடுவது குறித்து நான் ஒரு முடிவு எடுக்க வேண்டும். அது பற்றி இரண்டு மாதங்களில் சொல்கிறேன். நடிகர் விஜயின் பொதுக்கூட்டங்களில் கூட்டம் அதிகமாக கூடுவது குறித்து கேட்கிறீர்கள்.. நான் பரப்புரை செய்த காலங்களில் இவ்வளவு செல்போன் தகவல் தொழில்நுட்பம் கிடையாது.
எனது கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்தனர். கூட்டம் கூடுவதெல்லாம் வாக்காக மாறி இருந்தால் நான் பரப்புரை செய்தவர்கள்தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ரஜினி, அஜித் வந்தால் கூட்டம் இதைவிட அதிகமாக இருக்கும். கூட்டம் வராவிட்டால் அது பற்றி தான் விஜய் கவலைப்பட வேண்டும். கூட்டணி குறித்து கேட்கிறீர்கள். தேர்தல் காலங்களில் கூட்டணி அமையும் போது தான் யார் எந்த பக்கம் என்பது தெரிய வரும் என்றார்.
பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா என்று கேட்கிறீர்கள்.. விஜய் முதல்வர் ஆக வேண்டும் என்று அவரது கட்சியின் பொதுக்குழுவில் சொல்லிவிட்டார்கள். அப்படி என்றால் மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்கு கீழே இருக்க வேண்டுமா? விஜயுடன் பாஜக கூட்டணி வைக்காது என்பது எனது கருத்து. அதிமுகவினர் ஒன்றுபட்டால் சிறப்பாக இருக்கும்.
நாடு வலிமையாக இருக்க வேண்டுமென்றால் அதன் தலைவர் சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும். இன்றைக்கு பிரதமர் மோடி சக்தி மிக்க தலைவராக உள்ளார். இந்த தலைவரை வைத்துக்கொண்டு இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் உள்ளன. பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டிற்கு நல்லது என்பதை உணர்ந்தாலே போதும். இந்தியா உலக அரங்கில் முதலிடத்திற்கு முன்னேறும்.
போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறைக்கு உறுதியான அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்க வேண்டும். எது நல்லது எது கெட்டது என்று சொன்னால் கூட இளைஞர்கள் அதனை கேட்கும் நிலையில் இல்லை. போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கடுமையான தண்டனைகள் அவசியம்" என்று தெரிவித்தார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications