உயிருக்கு போராடியவரை தனது... மனிதாபிமான செயலால் காப்பாற்றிய சரத்குமார்
சென்னை: நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் சமீபத்தில் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடியவரை மருத்துவமனையில் சேர்த்து அவரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்.
நடிகர் சரத்குமார் சமீபத்தில் நெல்லை செல்லும் வழியில் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்திருக்கிறார். அவரைச் சுற்றிலும் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

இதனைக் கவனித்த சரத்குமார் சுற்றி இருந்தவர்களை விலக்கிவிட்டு விபத்துக்குள்ளான நபரைத் தனது காரிலேயே ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.
சினிமாவில் மட்டும் தான் பக்கத்திற்கு பக்கம் வசனம் பேசுவார்கள், பொது வாழ்க்கையில் சமூக அக்கறை சினிமாக்காரர்களுக்கு இல்லை என்ற பொதுவான கருத்தை இந்த செயலின் மூலம் தற்போது உடைத்து எறிந்திருக்கிறார் சரத்குமார்.
சரத்குமாரின் இந்த மனிதாபிமான செயலை தற்போது பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications