ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுவிக்கும் வரை அறவழியில் போராட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நடிகர் சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் தன்னையும் கைது செய்யுங்கள் என்றும் சிம்பு ஆவேசமாக கூறினார்.
நடிகர் சிம்பு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தடியடிக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது,

"வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் ஆண்டவனிடமிருந்து தப்பிக்க முடியாது. மீனவர்கள் மாணவர்களுக்கு உதவி செய்யவே வந்தனர். அவர்களையும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உதவி செய்தவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களை விடுவிக்கும் வரை நான் அகிம்சை வழியில் போராடுவேன். இல்லையெனில் என்னையும் கைது செய்யுங்கள். என்ன கைது செய்ய முடியாவிட்டால் கைது செய்தவர்களை விடுதலை செய்யுங்கள்.
மீனவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசே ஒரு நாள் தேர்வு செய்து ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட அனுமதி வழங்கி அறிவிக்க வேண்டும்". இவ்வாறு நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications