ராஜபக்சேவுக்கு எதிரான கையெழுத்தியத்துக்கு நடிகர் விஜய் ஆதரவு? ட்விட்டரில் கோர்த்துவிட்ட ரசிகர்கள்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் என்னதான் வெளிப்படையாக எதனையுமே தெரிவிக்காமல் இருந்தாலும் அவ்வப்போது அவரை சுற்றிய சர்ச்சைகள் ரெக்கை கட்டி பறந்துவிடுகின்றன.. அதுவும் இலங்கை பிரச்சனையில் சொல்லவே வேண்டாம்.. தற்போது ராஜபக்சேவுக்கு எதிரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்தியக்கத்துக்கு ஆதரவாக நடிகர் விஜய்யை கோர்த்துவிட்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்..

தமிழகத்தில் அரசியலில் இறங்க வேண்டும் என்று நீண்டநாள் கனவுடன் இருப்பவர் நடிகர் விஜய்..ஆனாலும் அது நடந்தேறாமல் இழுபட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு விஜய் நடித்த கத்தி படத்துக்கு எதிராக பெரும் பிரளயமே தமிழகத்தில் வெடித்தது. கத்தி திரைப்படத்தை தயாரிப்பதே இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவின் பினாமி சுபாஷ் கரண் என்பவர்தான்.. ஆகையால் சுபாஷ் கரணின் லைக்கா புரடக்ஷன்ஸ் நிறுவனம் கத்தி திரைப்படத்தை தயாரிக்கவே கூடாது என 150க்கும் மேற்பட்ட இயக்கங்கள் வரிந்து கட்டி போராட்டம் நடத்திக் கொண்டே இருந்தன..

Actor Vijay to join Anti Srilanka Campaign?

ஒருவழியாக திரைப்பட வெளியீட்டின் போது லைக்கா பெயர் இல்லாமல் வெளியிடுகிறோம் என சுபாஷ்கரண் தரப்பு கூற பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. தற்போது நடிகர் விஜய்யை மீண்டும் இலங்கை பிரச்சனைக்குள் இழுத்துவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள். ஏற்கெனவே விஜய் மனைவி ஈழத் தமிழர் என்பதால் அனைத்து ஈழ பிரச்சனைகளுக்கும் அவர் குரல் கொடுக்க வேண்டும் என்ற முழக்கமும் அவ்வப்போது எழுகிறது என்பதையும் நினைவில் கொள்வோம்..

@Actor_Vijay என்ற பெயரிலான ட்விட்டர் அக்கவுண்ட்டில் "ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு செய்கிறேன். . . " என்ற தலைப்பில் ஒரு ட்வீட் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

அதில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடம் இருந்து 10 லட்சம் வாக்குகள் கேட்டிருக்கிறது.. ஆனால் இதுவரை 2 லட்சம் வாக்குகள்தான் வந்திருக்கு.. இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும்.. உலகத்துல கிட்டத்தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம். குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்தறோம். ஆனாலும் வெறும் 10 லட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம்.. இந்த இணைப்பை பயன்படுத்தி 10 லட்சத்தில் நீங்கள் ஒருவர் ஆகுங்க" என்ற இமேஜ் போடப்பட்டு அதில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கக் கூடிய 'நாடு கடந்த தமிழீழ அரசின்' லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது உருத்திரகுமாரனை பிரதமராக கொண்டு அமெரிக்காவில் இயங்கி வருகிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். இதன் முயற்சியில்தான் இந்த கையெழுத்தியக்கம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இதில் இணைய வேண்டும் என்று @Actor_Vijay எனும் ட்விட்டர் அக்கவுண்ட் அழைப்பு விடுத்திருக்கிறது.

நடிகர் விஜய்யின் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது @Actor_Vijay என்கிறது அக்கவுண்ட் முகப்பு பக்கம்.

நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வமான @actorvijay என்ற ட்விட்டர் பக்கத்தை தொடர்ந்து இது ரீ ட்வீட் செய்தும் வருகிறது.

இப்படியான நிலையில் திடீரென இலங்கை பிரச்சனையில் விஜய்யை அவரது ரசிகர்களே கோர்த்துவிட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஒருவேளை ராஜபக்சே விவகாரத்தில் தமக்கான இமேஜ் டேமேஜை சரி செய்து கொள்ள விஜய் தரப்பே இப்படி ஒரு முயற்சியை வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கிறதா? என்பதும் தெரியவில்லை.

ஆக மொத்தம் பஞ்சாயத்துல நிற்க வெச்சுட்டாங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+