கேளிக்கை வரி விவகாரம்.. இன்று சுமூக முடிவு எட்டப்படும்.. விஷால் நம்பிக்கை
சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு சுமூகமான முடிவு இன்று கிடைக்கும் என அமைச்சர்கள் தெரிவித்தாக நடிகர் விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திரையரங்குகள் மீது 28 சதவீத ஜிஎஸ்டிவரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதனால், மாநில அரசால் கேளிக்கை வரியை விதிக்க முடியாது. இருப்பினும் தமிழக அரசோ, 30 சதவீத கேளிக்கை வரியை உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் செய்துள்ளது. இதனால் இரு வரிகளையும் சேர்த்து கட்டும் நிலைக்கு தமிழக சினிமாத்துறை தள்ளப்பட்டுள்ளது.

கேளிக்கை வரியை ரத்து செய்யகோரி திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் அபிராமி ராமநாதன் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்றும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தமிழக அரசுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரை திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
மேலும் திரைப்படத்திற்கான மாநில அரசின் கேளிக்கை வரியை நீக்ககோரி இன்று அமைச்சர்களை சந்தித்த பின்னர் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார். தாங்கள் ஜிஎஸ்டியை எதிர்க்கவில்லை என்றும், கேளிக்கை வரியை தான் தாங்கள் எதிர்ப்பதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
இதனிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், சூர்யா ஆகியோர் நேற்று சந்தித்தனர். கேளிக்கை வரியை ரத்து செய்ய அவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விதித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். மற்ற மாநிலங்கள் போல் ஒரே வரி விதிப்பு முறை வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு நல்ல முடிவு இன்று கிடைக்கும் என அமைச்சர்கள் தெரிவித்தனர் என்றார் விஷால். கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி, தமிழகத்தில் திரையரங்குகள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றன.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications