நடிகை அல்போன்சா தலைமறைவு.. போலீஸ் தேடுகிறது!
கணவரை அபகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகை அல்போன்சா நேற்று தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சைதாப்பேட்டையை சேர்ந்த சுஜாதா என்பவர் தனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து விட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை கொலை செய்து விடுவதாக அல்போன்சா மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

புகார் மனுவுடன் அல்போன்சாவும் ஜெய்சங்கரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் அடங்கிய சி.டி.யையும் கொடுத்திருந்தார். மத்திய குற்றப் பிரிவு கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் வரதட்சணை தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி இது குறித்து விசாரணை நடத்தினார்.
சுஜாதாவை நேரில் அழைத்தும் விசாரித்தார். அப்போது ஜெங்சங்கரை 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அல்போன்சா கலந்து கொண்டார் என்றும் தெரிவித்தார். தனக்கும் ஜெய்சங்கருக்கும் திருமணம் நடந்ததற்கான புகைப்பட ஆதாரங்களையும் வழங்கினார்.
இதையடுத்து நடிகை அல்போன்சாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை.
போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. போலீசார் தேடி வருகிறார்கள். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் அல்போன்சாவுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications