முதலில் ஏசி.. அடுத்து சொகுசு கார்.. தொடர் மோசடியில் சின்னத்திரை நடிகையின் கணவர் கைது
Recommended Video

சென்னை: சொகுசு காரை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை அனிஷாவின் கணவர் சக்தி முருகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை நெசப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் அனிஷா (27). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். சில நாடகங்களிலும் நடித்துள்ளார்.ஸ்கை எக்யூப்மென்ட் என்ற நிறுவனத்தை கணவர் சக்தி முருகனுடன் சேர்ந்து நடத்தி வந்தனர். அதேபோல் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தையும் நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்காக ரூ. 37 லட்சம் மதிப்பிலான 103 ஏசிக்களை கே.கே. நகரைச் சேர்ந்த பிரசாந்திடம் வாங்கினர். ஆனால் அதற்கான பணத்தை தராமல் இடித்தடித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது.

குற்றவாளி
இதையடுத்து நேரில் போய் கேட்டபோது அனிஷாவும் சக்தியும் பிரசாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து கே கே நகர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் அனிஷா மற்றும் அவரது மைத்துனர் ஹரிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். எனினும் முக்கிய குற்றவாளியான சக்தி முருகன் தலைமறைவானார்.

வாடகைக்கு இயக்கம்
இந்நிலையில் இவர்கள் நெசப்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களை தங்களது நிறுவனத்துடன் இணைந்து வெளியில் வாடகைக்கு இயக்கினர்.

வாடகைக்கு கார்
ஓஎல்எக்ஸில் தங்களுடைய கார்களை விற்பதாக கூறியவர்களை தொடர்பு கொண்ட சக்தி முருகனும் அவரது மேலாளர் ரமேஷும் தங்கள் நிறுவனத்தில் கார்களை இணைத்துக் கொண்டு கணிசமான தொகையை வாடகையாக பெறுங்கள் என கூறினர்.

சுருட்டிய தம்பதி
இதை நம்பி 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொகுசு கார்களை இணைத்து அனைத்து அசல் ஆவணங்களையும் நிறுவனத்தில் வழங்கியுள்ளனர். இதையடுத்து காரின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அந்த ஆவணங்களை அடகு வைத்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி விட்டு கடந்த மாதம் அந்த நிறுவனத்தை மூடிவிட்டனர்.

இடைத்தரகர் கைது
இதையடுத்து கார் உரிமையாளர்கள் 25 பேர் தங்களை ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரில் எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மேலாளர் ரமேஷை கைது செய்தனர். கார் மோசடியில் தலைமறைவாக உள்ள சக்தி முருகன் மற்றும் ஹரீஷ் இன்னும் சிலரை போலீஸார் தேடிவந்த நிலையில், கார்களை சக்தி முருகனிடம் பெற்று வெளியே விற்றுகொடுத்த இடைத்தரகர் பாண்டியன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

கார் பறிமுதல்
அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்த 16 கார்களை போலீஸார் மீட்டனர். தலைமறைவாக இருந்த சக்திமுருகன் நேற்று சென்னை வந்துள்ளான் என போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சக்திமுருகணை போலீஸார் கைது செய்தனர் அவரிடமிருந்து பி.எம்.டபிள்யூ. கார் ஒன்றும் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications