போலீஸ் என்னை அடித்து வெளியேற்றியது.. நடிகை வனிதா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
போலீசார் தன்னை வீட்டில் இருந்து அடித்து வெளியேற்றியதாக நடிகை வனிதா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: போலீசார் தன்னை வீட்டில் இருந்து அடித்து வெளியேற்றியதாக நடிகை வனிதா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு அடிதடி வரை கூட சென்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மனைவி மறைந்த மஞ்சுளாவின் பெயரில் சென்னை ஆலப்பாக்கத்தில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை நடிகர் விஜயகுமார் சினிமா படப்பிடிப்புக்கு விட்டு வருகிறார்.

காலி செய்ய மறுப்பு
இந்த வீட்டில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வனிதா வாடைக்கு எடுத்ததாகவும், ஆனால் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும், மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி நேற்று இரவு வனிதாவை வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனிதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

விஜயகுமார் அச்சுறுத்துகிறார்
இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை வனிதா இன்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, என்னை வீட்டை விட்டு காலி செய்யுமாறு தந்தை விஜயகுமார் தம்மை அச்சுறுத்துகிறார்.

அம்மாவுடன் இருப்பது போல்
சொந்த வீட்டுக்கு நான் எப்படி வாடகை தர முடியும்? சென்னை மதுரவாயிலில் உள்ள வீட்டு முகவரிதான் என் பாஸ்போர்ட்டில் உள்ளது. 'அம்மாவுடன் இருப்பதுபோல் உணர்வதால் வீட்டில் தங்கியிருந்தேன்.

வாடகை கொடுக்கிறேன்
வீட்டில் இருந்து தந்தை விஜயகுமார் விரட்டுகிறார். வேறு ஒருவருக்கு வீட்டை வாடகை விடுவதற்காக என்னை வெளியே அனுப்ப முயற்சிக்கிறார். வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

போலீசார் அடித்தனர்
காவல்துறை அதிகாரிகள் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினர். சிவில் வழக்கு நிலுவையில் உள்ள போது போலீசார் வழக்குப்பதிவு செய்தது தவறு. இவ்வாறு நடிகை வனிதா தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications