பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கினார் நடிகை வரலட்சுமி.. அரசியலுக்கு வரலாம் என்றும் அறிவிப்பு!!
நடிகை வரலட்சுமி பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கியுள்ளார். வேவ் சக்தி என அந்த அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை: நடிகை வரலட்சுமி பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு நடிகைகள் மட்டுமின்றி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அனைத்து பெண்களுக்கும் உதவும் என தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகை ஒருவர் கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நடிககை வரலட்சுமி தன்னிடம் முன்னணி டிவி சேனல் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் தவறாக பேசியதாக தெரிவித்தார.

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்புக்காக அவர் புது அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். வேவ் சக்தி என அந்த பாதபாப்பு அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேவ் சக்தி என்ற பெண்கள் பாதுகாப்புக்கான இந்த அமைப்பு நடிகைகள் மட்டுமின்றி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அனைத்து பெண்களுக்கும் உதவும் என்றார். எதிர்காலத்தில் அரசியலில் தாம் ஈடுபடலாம் என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
