காளியம்மாளுக்கே நான் ஆத்தா.. செருப்பு மாதிரி.. மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பேன்.. விஜயலட்சுமி ஆவேசம்

சீமானை மிரட்டி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கொந்தளித்த காளியம்மாள்... பதில் கொடுத்த விஜயலட்சுமி

    சென்னை: "காளியம்மாள் எல்லாம் எனக்கு செருப்பு.. இந்த மாதிரி எத்தனை செருப்பை நான் மிதிச்சிட்டு, போட்டுட்டு போகணும்னு தெரிஞ்சுதானே வந்திருப்பேன்.. என்ன, பூச்சாண்டி காட்டிறீங்களா? காளியம்மாள் எல்லாம் பேசவேக்கூடாது, அவ காளின்னா, நான் அவளுக்கு ஆத்தா.. எனக்கு இந்த மாதிரி சில்லறை ஆட்களோட கலாட்டா தேவையில்லை.. நிறுத்திக்குங்க எல்லாத்தையும்" என்று நடிகை விஜயலட்சுமி எச்சரிக்கை வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

    கடந்த சில தினங்களாகவே நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் முன்வைத்து வருகிறார்.. இது தமிழக அரசியலில் பரபரப்பை தந்து வருகிறது.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சிறந்த பேச்சாளரான காளியம்மாள், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, விஜயலட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த கூட்டத்தில் காளியம்மாள் பேசியதாவது:

    அருமை

    அருமை

    "எந்த மனிதரை பெண்களை வன்மைப்படுத்துவதாக ஒப்பிடுவது? அந்தம்மா சொல்லிட்டு கிடக்கு.. இருக்கு.. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையின் அருமை தெரியுமா? அன்பு தெரியுமா? உணர்வு தெரியுமா? அந்த இணக்கம்தான் எங்கள் அண்ணனுக்கும் எங்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வு.. இனி ஒரு நாக்கு, எங்க அண்ணனையும், மத்த பெண்களையும் ஒன்றுபடுத்தி பேசினே?

    விலைமாது

    விலைமாது

    அண்ணன்-தங்கையா பேசு, தகப்பன்-மகளா பேசு, வேற எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற.. எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.. என்னா பேச்சு இது? நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு திரியாதே.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன்" என்று கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

    விஜயலட்சுமி

    விஜயலட்சுமி

    இந்நிலையில், காளியம்மாளுக்கு விஜயலட்சுமிக்கு பதிலடி தந்து ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில் சீமானை பார்த்துதான் மொத்த கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்... விஜயலட்சுமி பேசியதாவது: "காளியம்மாளுக்கு எல்லாம் தெரியுமா? காளியம்மாள் எல்லாம் எனக்கு செருப்பு.. இந்த மாதிரி எத்தனை செருப்பை நான் மிதிச்சிட்டு, போட்டுட்டு போகணும்னு தெரிஞ்சுதானே வந்திருப்பேன்.. என்ன பூச்சாண்டி காட்டிறீங்களா எனக்கு?

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    காளியம்மாள் எல்லாம் பேசக்கூடாது, அவ காளின்னா, நான் அவளுக்கு ஆத்தா.. எனக்கு இந்த மாதிரி சில்லறை ஆட்களோட கலாட்டா தேவையில்லை... உங்க வீட்டில ஏதாவது வேலை இருந்துச்சுன்னா, அவளை போய் பண்ண சொல்லுங்க, என்கிட்ட வேணாம்.. ஆதரவாளர்களை விட்டு மிரட்டுவதை நிறுத்திக்குங்க.. அடுத்து ஆடியோ எடுத்து வெளியிட போறேன். அதை எடுத்து விட்டேன்னு வெச்சுக்குங்க.. இறங்கிட்டேன்..

    அடங்குங்க எல்லாரும்

    அடங்குங்க எல்லாரும்

    அன்னைக்கு உங்க தம்பிங்களை விட்டு அசிங்க அசிங்கமாக பேச வைக்கிறீங்க? எவனோ ஒரு நாய் என்னை பத்தி அசிங்கமா பேசறான்? இன்னைக்கு இவ.. தங்கச்சியாக இருந்துட்டு போகட்டும், எவளா இருந்துட்டு போகட்டும், எனக்கென்ன வந்துச்சு? ஒன்னும் குடிமுழுகி போயிடல.. இப்பவும் சொல்றேன், என் சாவுக்கு சீமான்னு காரணம்ன்னு எழுதி வெச்சிட்டு, நான் பண்ணிடுவேன்.. அப்பறம் வெளியே வரவே முடியாது.. பண்ணட்டுமா.. எல்லாரும் அடங்குங்க?" என்று ஆவேசமாக பேசுகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+