For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. இறப்புக்கு காரணம் ஸ்டீராய்டு மருந்துகளே.. அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்

ஜெயலலிதா இறப்புக்கு காரணமே அவருக்கு கொடுக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளாகும் என்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா இறப்புக்கு முக்கிய காரணமே அவருக்கு நீண்ட நாள்களாக வழங்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளாகும் என்று அக்குபஞ்சர் மருத்துவரும், சிறையில் இருந்து வந்த ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவருமான அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் அவரது இறப்புக்கு அவர் உட்கொண்ட ஸ்டீராய்டு மருந்துகளே காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் டாக்டர் சங்கர்.

இதுகுறித்து சன் நியூஸ் தொலைகாட்சியில் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் கூறுகையில், மருந்தில்லா மருத்துவம் என்று அக்குபஞ்சர் மருத்துவத்தின் மகத்துவம் குறித்து முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு நான் அளித்த சிகிச்சையால் குணமடைந்தார். இதை ஜெயலலிதாவிடம் அவர் கூறியிருந்திருக்கலாம். அதேபோல் சசிகலாவுக்கு தூக்கமின்மை, தைராய்டு போன்ற பிரச்சினைகள் இருந்தன. அவருக்கும் நான் சிகிச்சை அளித்தேன்.

சிகிச்சை அளித்தேன்

சிகிச்சை அளித்தேன்

பெங்களூர் சிறையிலிருந்து வந்தபோது கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் ஜெயலலிதாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அவர் எங்கும் செல்லாமல் இருந்தார். எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் நான் போயஸ் கார்டனுக்கு சென்று அவருக்கு சிகிச்சை அளித்தேன்.

மூட்டு வலி

மூட்டு வலி

அப்போது அவரது கல்லீரலின் ஆற்றல் சற்று ஏற்றத் தாழ்வுடன் இருந்தது. அதை சரி செய்து விட்டு அவரது மூட்டு வலி, வெர்டிக்கோ எனப்படும் காலையில் எழுந்தவுடன் ஏற்படும் மயக்க நிலை, இரவில் தூக்கம் இல்லாமல் இருப்பது, ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவற்றை நான் சரி செய்துள்ளேன். அவருக்கு வலி நிவாரணிக்காக ஸ்டீராய்ட்ஸ்களை நீண்ட காலமாக கொடுத்து வந்துள்ளனர். அதன் பின்விளைவுகள் அதிகமாக இருந்ததை நாடி பிடித்தவுடன் தெரிந்து கொண்டேன்.

2 மாதங்களாக சிகிச்சை

2 மாதங்களாக சிகிச்சை

இதை ஜெயலலிதாவிடம் தெரிவித்தபோது அவரும் வலி நிவாரணிகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்வதாக கூறினார். அவருக்கு 2 மாதங்களாக நான் சிகிச்சை கொடுத்து வந்தேன். சர்க்கரை நோய்க்கு நான் சிகிச்சை அளித்தபோது அவரது கால் விரல் பாயிண்டில் ஊசி செலுத்தினேன். அப்போது ஜெயலலிதாவின் கால்களில் 10 விரல்களும் இருந்தன. சர்க்கரை நோயால் அவரது விரல்கள் வெட்டப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. இது வதந்திதான்.

நுரையீரல் தொற்று

நுரையீரல் தொற்று

ஸ்டீராய்டுகளை அதிகம் உட்கொண்டதால்தான் அவருக்கு சிறுநீர் பாதையில் தொற்று, நுரையீரல் தொற்று ஆகியன ஏற்பட்டது. ஸ்டீராய்டு மருந்துகள் அதிகம் எடுத்தால் முகம் நிலா போன்று வீங்கிடும். கன்னத்துக்கு கீழ் இருக்கும் சதைகள் தொங்கிவிடும். இந்த பிரச்சினையையும் நான் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்தேன். இதை பார்த்து அவர் ஆச்சரியம் அடைந்தார்.

மூட்டு வலிக்கு வழி

மூட்டு வலிக்கு வழி

ஸ்டீராய்டு வகை மருந்துகள் தைராய்டு சுரப்பிகளை பாதித்து கால்சியம் மெட்டபாலிசத்தை குறைப்பதால் எலும்புகள் வலிவிழக்கும். இதன் பாதிப்பால் மெட்ரோ ரயில் திட்ட தொடக்கத்தின்போது அவரால் நிற்க முடியாமல் கண் கலங்கினார். இந்த வீடியோவை நாம் அனைவரும் பார்த்துள்ளோம் என்றார் டாக்டர் சங்கர்.

English summary
Acupuncture specialist Sankar says that Jayalalitha died because of steroid medicines which she has taken for long time. Steroids damage the other organs side by side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X