கருணாநிதிக்கு சிகிச்சையளிக்க கூடுதல் டாக்டர்கள் வரவழைப்பு.. மருத்துவ உபகரணங்களுடன் விரைந்தனர்
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு சிகிச்சையளிக்க கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் லேசான நலிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறு நீர் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்று மற்றும், வயோதிகம் காரணமாக அவருக்கு நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பபட தமிழக அமைச்சர்கள் பலரும் நேற்று இரவு கோபாலபுரம் இல்லம் சென்று ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
நேற்று 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கருணாநிதிக்கு சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில், காவிரி மருத்துவமனையின் கூடுதல் டாக்டர் குழு கோபாலபுரம் இல்லத்திற்கு இன்று காலை வந்தது. கூடுதலாக 4 மருத்துவர்கள் சிகிச்சையளிக்க சென்றனர். அவர்கள் மருத்துவ உபகரணங்களையும் கொண்டு வந்தனர்.
கூடுதல் மருத்துவர்கள், சிகிச்சையளித்த பிறகு நோய் தொற்று ஒருவேளை குறையாவிட்டால், காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியை அழைத்து செல்ல மருத்துவர்கள் திட்டமிடக்கூடும் என கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications