பழனி முதல் சுவாமி மலை வரை.. அங்கிருந்து போயஸ் கார்டன் வரை... ஒரே மொட்டை!
சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மொட்டை போடுவதில் படு பிசியாக உள்ளனர். புது மொட்டைத் தலையுடன் தமிழகத்தில் பல அதிமுகவினர் உலா வருகின்றனர். எல்லாம் அவர்களின் தலைவி வழக்கிலிருந்து விடுதலையானதால் நேர்த்திக் கடனுக்காக போட்ட மொட்டைதான்.

ஜெயலலிதா அப்பீல் மனு மீது தீர்ப்பு வெளியான தினத்திலிருந்தே இந்த மொட்டை போடுவது, தாடி எடுப்பது ஆகிய வேலைகளில் அதிமுகவினர் இறங்கி விட்டனர்.

திருப்பூர் மேயர் விசாலாட்சி பழனிக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து அங்குள்ள தண்டாயுதபாணி கோவிலில் மொட்டை போட்டுச் சென்றார். அவர் மொட்டை போட்டபோது அருகில் ஒருவர் ஜெயலலிதா படத்தைப் பிடித்தபடி நின்றார். அதாவது அம்மா முன்னிலையில் மொட்டையாம்.
இதேபோல சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
சுவாமி மலை முருகன் கோவிலில் இன்று பாபநாசம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. துரைக்கண்ணு மொட்டை அடித்து சிறப்பு அபிஷேகம் நடத்தினார். இதில் கும்பகோணம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அழகு த. சின்னையன், பாபநாசம் ஒன்றியக் குழு தலைவர் கோபிநாதன், கும்பகோணம் கவுன்சிலர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போயஸ் கார்டனில்
இதேபோல இன்று ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதியில் பெரும் திரளான அதிமுகவினர் திரண்டு வந்தனர். அனைவரும் அங்கு சாலையோரமாக அமர்ந்து முடி காணிக்கை செலுத்தினர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாம்.

ஜெயலலிதா இல்லமே தங்களுக்குக் கோவில் என்பதால் தாங்கள் கோவிலுக்குப் போகாமல் இங்கு வந்து மொட்டை போடுவதாக வேறு அவர்கள் விளக்கம் கூறினர்.
இது மட்டும் தனிக் கூவலா இருக்கே...!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications