ஏற்காடு தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா வேட்புமனு தாக்கல்!
சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள் கடந்த ஜூலை 18 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த பெருமாள் எம்.எல்.ஏ.வின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா இன்று காலை கலெக்டர் அலுவலகம் முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலரும், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சபாபதியிடம் மனு தாக்கல் செய்தார்.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது.. இதையடுத்து, முதல்நாளான 9ஆம் தேதியே தி.மு.க. வேட்பாளர் மாறன் மற்றும் 4 சுயேட்சைகள் மனுத்தாக்கல் செய்தனர்.
மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்பதால் சுயேட்சைகள் சிலரும் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய வருகிற 16 ஆம் தேதி தேதி கடைசி தேதியாகும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications