தூத்துக்குடி மேயர் தேர்தல்.. அதிமுகவின் அந்தோணி கிரேசி வேட்பு மனு தாக்கல்... !
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேசி இன்று தேர்தல் அலுவலர் மதுமதியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்த சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் தூத்துக்குடி மாநகராட்சி பொறுப்பு மேயராக சேவியர் பதவி வகித்தார். இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக அந்தோணி கிரேசி அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளர் அந்தோணி கிரேசி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான மதுமதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிடோர் உடனிருந்தனர். மாற்று வேட்பாளராக தனலட்சுமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளரைத் தவிர இதுவரை வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மேலும் அந்தோணி கிரேசி மட்டுமே தற்போது தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications