நடிகர்கள் அரசியல் பயணம்: ஆள் சேர்க்கும் அதிமுக - பிப். 2ல் மா.செக்கள் கூட்டம்
நடிகர்கள் கமல், ரஜினி அரசியலுக்கு வர உள்ள நிலையில் அதிமுக தனது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை தக்க வைக்க உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதியன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடங்
சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பின்னர் தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் பிப்ரவரி 2ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர்கள் கமல், ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையும் முடிக்கிவிடப்பட்டுள்ளது.

அதிமுக உறுப்பினர் சேர்க்கை
அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் 29ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி 29ஆம் தேதி தொடங்கப்படும்.

அதிமுக அலுவலகத்தில் விண்ணப்பம்
கட்சியின் தலைமை கழகத்தில் அனைத்து நாட்களிலும் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் உறுப்பினர் உரிமைச் சீட்டு ஆகியவை தலா ரூ. 10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கவனமாக சேருங்கள்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் எம். பி., எம்எல்ஏக்கள், கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உறுப்பினர் பதவியை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் கேட்டு கொண்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர் கூட்டம்
பிப்ரவரி 2ஆம் தேதியன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், உறுப்பினர் சேர்க்கை பற்றி விவாதிக்கப்பட உள்ளது. கூடவே தினகரனின் தனி ஆவர்த்தனம் பற்றியும், நடிகர்களின் அரசியல் பயணம் பற்றியும் விவாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications