அமைச்சர் முன்னிலையில் சிறுமிக்கு கதற கதற பச்சை குத்திய கொடூரம்... வீடியோ
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பால் குடம், யாகம், ரத்ததானம் செய்த ரத்தத்தின் ரத்தங்கள், சென்னை வேளச்சேரியில் சிறுமி ஒருவர் கதற கதற பச்சை குத்தியுள்ளனர். அமைச்சர் முன்னிலையில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
ஒருபக்கம் அன்னதானங்கள் நடந்து கொண்டிருக்க, கடந்த 23ம் தேதி வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பெண்கள், ஆண்கள் என 1000 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா படத்தை பச்சை குத்தி விட்டனர். இதில் ஒரு சிறுமிக்கு ஜெயலலிதா உருவம் பச்சை குத்தப்பட்டது. அப்போது, பச்சை குத்திக் கொண்ட அந்த சிறுமி வலி தாங்காமல் அழும் வீடியோ தற்பொழுது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் முன்னிலையிலேயே அந்த சிறுமிக்கு பச்சை குத்தப்பட்டுள்ளது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதால் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நல்லா கொண்டாடுறாங்கய்யா பிறந்தநாளு...
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications