For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிகிச்சைக்காக ஜெ. சிங்கப்பூர் செல்கிறார் என்பது வதந்தி: சி.ஆர். சரஸ்வதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் என்பது வதந்தியே என அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று 4-வது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

ADMK denies Jayalalithaa will be flown to Singapore for treatment

இதனிடையே முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசெபத் மருத்துவமனைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஆனால் இதை அதிமுக மறுத்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, முதல்வர் ஜெயலலிதா நலத்துடன் உள்ளார். தொண்டர்கள் கவலை அடைய வேண்டாம். முதல்வர் விரைவில் வீடு திரும்புவார். சிகிச்சைக்காக முதல்வர் சிங்கப்பூர் செல்வதாகக் கூறப்படும் தகவல் வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa, who had been admitted to hospital on Thursday, would be flown to Singapore for treatment, reports said on Saturday. However the AIADMK was quick to deny the reports. “This news is false. She is very well. Her fever has come down,” AIADMK spokesperson CR Saraswathi told ANI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X