அதிமுக தேர்தல் அறிக்கை மே.2ல் வெளியாகிறது... எகிறும் எதிர்பார்ப்புகள்!
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை வரும் 2 ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் சென்னையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் எனவும் தெரிகிறது.
பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு, விவசாயம்-கல்விக் கடன்கள் ரத்து உள்ளிட்ட திட்டங்கள் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றன.

ஆளும்கட்சியான அதிமுக இதுவரை தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இதனால், தேர்தல் அறிக்கையில் எந்தெந்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற விவரங்களை அறிய எதிர்க்கட்சியினர் உள்பட அனைத்துத் தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கை வரும் 2 ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் சென்னையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் எனவும் தெரிகிறது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்களைக் கவரும் பல அறிவிப்புகள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்புகளால் தேர்தல் களத்தில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அதிமுகவினர் கூறினர். இதனால், அதிமுகவினர் மத்தியில் தேர்தல் அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தாண்டி அம்மா உணவகம், குடிநீர், உப்பு, சிமென்ட் என மக்களைக் கவரும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுபோன்ற பல திட்டங்கள் இந்த சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications