9 தீர்மானங்கள்.. இடைத்தேர்தல் விவாதம்.. முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட அதிமுக செயற்குழு!
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
Recommended Video

சென்னை: அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

இன்றைக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க. செயற்குழு சென்னையில் 20-ந் தேதி நடக்க இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக செயற்குழு ஒத்தி வைக்கப்பட்டது.

எத்தனை பேர் பங்கேற்றனர்
செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, கட்சியில் காலியாக இருக்கும் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இடைத்தேர்தல்
மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது? குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி, மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது.

9 தீர்மானம் நிறைவேற்றம்
அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் பெரியார் ஆகியோருக்கும் பாரத ரத்னா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications