டீ குடித்து கொண்டிருந்த அதிமுக ரியல் எஸ்டேட் புரோக்கரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்!
அதிமுக ரியல் எஸ்டேட் புரோக்கர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: அதிமுக பிரமுகர் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பி சென்றுள்ளது.
தாம்பரத்தை அடுத்துள்ள கிராமம் நயம்பாக்கம். இங்கு வசித்து வருபவர் மூங்கிலான். வயது 56. இவர் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்துவந்ததுடன், கூடவே ரியல் எஸ்டேட் தொழிலையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில், மூங்கிலான் வேலைநிமித்தமாக தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார். மஞ்சுவாஞ்சேரி என்ற இடத்தில் வந்தபோது, டீ சாப்பிடலாம் என்று நினைத்து, பைக்கை நிறுத்தி விட்டு அங்குள்ள ரோட்டோர கடை ஒன்றில் டீ குடித்து விட்டு மீண்டும் பைக் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
கொஞ்ச தூரம்தான் சென்றிருப்பார், அதற்குள் 3 பேர் கொண்ட நபர்கள் பைக்கை வழி மறித்து தடுத்து நிறுத்தினர். மூங்கிலானிடம் என்ன ஏதுவென்றுகூட பேசாமல், அவர்களிடமிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கினர். ஒரு சில வினாடிகளிலேயே பல இடங்களில் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடிவிட்டது. மூங்கிலானின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.
அதிமுக ரியல் எஸ்டேட் புரோக்கர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.ஆனால் அதற்குள் ரத்த வெள்ளத்தில் மூங்கிலான் அதே இடத்தில் துடிதுடித்து விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றும் வழியிலேயே மூங்கிலான் உயிர் பிரிந்தது. இந்த படுகொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை கையிலெடுத்துள்ளனர். மூங்கிலானுக்கு விரோதிகள் யாரேனும் உள்ளனரா? ரியல் எஸ்டேட் தொழிலில் ஏதேனும் தகராறு இருந்து வந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? என தீவிர விசாரணை நடைபெற்று வருவதுடன், தப்பியோடியவர்களுக்கும் வலையை வீசியுள்ளனர் போலீசார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications