மீஞ்சூர் அருகே 3 தேமுதிக நிர்வாகிகளை வழிமறித்து அரிவாளால் வெட்டிய 2 அதிமுகவினர்
சென்னை: மீஞ்சூர் அருகே தேமுதிகவினர் 3 பேரை வழிமறித்து அதிமுக நிர்வாகிகள் இருவர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
மீஞ்சூர் அருகே இருக்கும் செங்கழுநீர்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கே. சுதாகர், எஸ்.சுதாகர், பாபு. தேமுதிக நிர்வாகிகளான அவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான கமலேஷ், பிரகாஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படும்.
இந்நிலையில் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு சுதாகர் உள்ளிட்ட 3 பேரும் இரவு நேரத்தில் நடந்து சென்றபோது பிரகாஷும், கமலேஷும் அவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் அந்த 3 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
வலியால் துடித்த அவர்களின் அலறல் கேட்டு பொதுமக்கள் வந்ததால் அந்த 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டுப்பட்டுக் கிடந்த அந்த 3 பேரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கமலேஷ் மற்றும் பிரகாஷை தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications