பிரச்சாரத்திற்கு வரும் அம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து ஜமாய்க்கணும்: மா.செ.க்களுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வருகையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், அவரது பிரச்சார மேடை குறிப்பிட்ட திசையை நோக்கி அமைக்கப்பட வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

ADMK functionaries given specific instructions about Jaya's campaign

ஒரு மணிநேரம் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வருகையில் அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும் ஜெயலலிதா பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கான மேடை, எங்கு, எந்த திசையில் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இது தவிர ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வருகையில் தொண்டர்கள், மக்களை திரட்டி வருவது குறித்தும் உத்தரவிடப்பட்டது.

ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களின் பெயர், செல்போன் எண்கள் உள்ளிட்ட விபரங்கள் வழங்கப்பட்டது. கட்சி சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+