நடிகை ராதாவால் என் கணவர் உயிருக்கு ஆபத்து: அதிமுக நிர்வாகியின் மனைவி புது புகார்
சென்னை: நடிகை ராதாவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிமுக நிர்வாகி ஒருவரின் மனைவி போலீசில் புது புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாகத்தை சேர்ந்தவர் உமாதேவி. அதிமுக நிர்வாகி முனிவேல் என்பவரின் மனைவி. அவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த ராதா மீது புகார் அளித்தார்.
ராதாவிடம் இருந்து தனது கணவரை மீட்டுத் தருமாறு அவர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.

விசாரணை
உமாதேவியின் மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் அது குறித்து விசாரணை நடத்த தியாகராய நகர் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். இந்த புகாரால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு உமா மீண்டும் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்து
தியாகராய நகர் துணை கமிஷனர் சரவணனை சந்தித்து புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் உமாதேவி. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நடிகை ராதாவால் என் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் உடனே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொலை மிரட்டல்
நடிகை ராதா தனக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக உமாதேவி தெரிவித்திருந்தார். மேலும் அடிக்கடி போன் செய்து தன்னையும், தனது மகளையும் ராதா மிரட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ராதா
உமாதேவி அடுத்தடுத்து இரண்டு புகார் மனுக்களை போலீசாரிடம் அளித்துள்ளார். இருப்பினும் ராதா இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications