சலுகை அளித்தது தி.மு.க. அல்ல; அ.தி.மு.க.: ஸ்டாலினுக்கு வன்னியர் சங்கம் பதில்!
சென்னை: தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படவில்லை என்றும், அ.தி.மு.க. ஆட்சியில்தான் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ''எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நடந்த வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ற 40,000 பேர் மீது போடப்பட்ட வழக்குகள் தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதுடன், அப்போராட்டத்தில் உயிரிழந்த 25 வன்னியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும், மாதம் தலா ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் தி.மு.க. ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு 20 சத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது'' என்றார்.
இதற்கு பதிலளித்து, மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.மணிவண்ணன், ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''ஏற்காடு இடைத்தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை பெற்றிட தி.மு.க. ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டதாக நீங்கள் ( ஸ்டாலின்) பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. 20 சத இடஒதுக்கீடு போராட்டத்தில் 25 வன்னியர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்க காரணமே தி.மு.க.தான். அதற்கு அண்ணா அறிவாலயம் திறப்பு நிகழ்ச்சியே முக்கியக் காரணமாகும். தவிர, வன்னியர்களான பு.தா.அருள்மொழி, பு.தா.இளங்கோவன், வாழைச்செல்வன், தாராசிங், ராஜேந்திரன் ஆகியோர் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும், 50 ஆயிரம் வன்னிய இளைஞர்கள் மீது வழக்கு போட்டு கொடுமைப்படுத்தப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில்தான் நடைபெற்றது.
தி.மு.க.வில் தகுதி வாய்ந்த வன்னியர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்காமல் தலைமைக்கு சாதமாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு, தி.மு.க.வை வளர்த்த மதுராந்தகம் ஆறுமுகம், மாயவரம் கிட்டப்பா, ஏ.ஜி.கோவிந்தசாமி, செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ஓரங்கப்பட்டதே உதாரணமாகும். மேலும், வன்னியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க., ரூ.10 ஆயிரம் கோடி வன்னியர்களின் பொதுச் சொத்துக்களை மீட்கவும், வன்னியர்களுக்கு பொதுநல வாரியத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிடவும் முன்வரவில்லை. அதேவேளையில், வன்னியரான என்.ரங்கசாமி புதுச்சேரியில் முதல்வராக இருக்கவும், பா.ம.க. சட்ட அங்கீகாரம் பெறவும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள், 5 எம்.பி.க்கள் பதவியும், சட்டப் பேரவையில் 23 எம்.எல்.ஏ.க்கள் பதவியும் கிடைத்தது அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடந்தது.
தமிழக அரசு வரலாற்றில் அ.தி.மு.க. ஆட்சியில் தான் 5 அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியில் மாவட்ட, ஒன்றியச் செயலர்கள் என வன்னியர்கள் அதிகளவில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
வன்னியரான வாழப்பாடி ராமமூர்த்திக்கு மத்தியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவி கிடைக்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவே காரணமாக இருந்தார்.
அதேசமயம் தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே வாழப்பாடி ராமமூர்த்தியை தோற்கடித்தது. தற்போது வன்னிய சமுதாயத்திலும் சிந்தனைவாதிகள் உருவாகி விட்டதால் வெறும் வாய் பேச்சால் வன்னியர்களை ஏமாற்ற முடியாது'' எனக் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications