14 தீர்மானங்களில் 10ல் "அம்மா" வுக்குப் பாராட்டும், நன்றியும்.. மிச்சம் 4 மட்டுமே மக்களுக்கு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜெயலலிதாவை மறுபடியும் முதல்வராக்குவோம் என்பதுதான் அதில் முதல் தீர்மானம்.
அவர்கள் போட்ட 14 தீர்மானங்களையும் பார்த்தால் ஷார்ட் ஹேன்ட் நோட்ஸ் எடுத்தது போலவே தெரிகிறது. மேலும் 14 தீர்மானங்களில் 10 தீர்மானங்களை ஜெயலலிதாவைப் பாராட்டவும், நன்றி தெரிவிக்கவும், சூளுரைக்கவுமே பயன்படுத்தியுள்ளனர் அதிமுகவினர்.

அதிமுகவினர் கூடி போட்ட தீர்மானங்கள் இவைதான்:
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கமும், வாழ்த்தும்.
- அதிமுக தலைமைக்கு இன்னல் வந்துற்றபோது, அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் உயிர் நீத்த 263 கழக உடன்பிறப்புகளுக்கு வீரவணக்கம்!
- கழகப் பொதுச் செயலாளராக 7வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் அம்மாவுக்குப் பாராட்டு!
- தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏற்பட்ட வரலாறு கண்டிராத கனமழை, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை இரவு பகலாகக் கண்காணித்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக வழங்கிடப் பாடுபட்ட முதலமைச்சர் அம்மாவுக்குப் பாராட்டும், நன்றியும்!
-

- முதலமைச்சர் அம்மா அவர்களுடைய அரசு விடுத்திருக்கும் கோரிக்கைகளின்படி, மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்கிட வலியுறுத்தல்!
- தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து துன்புறுத்தி வருவதையும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வண்ணம் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து படகுகளை பறிமுதல் செய்து மனிதாபிமானமற்ற வகையில் செயல்பட்டு வருவதையும் தடுத்து நிறுத்திட, மத்திய அரசு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவில் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வலியுறுத்தல்!.
- சங்க காலம் முதல் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா தொடர்ந்து நடைபெற, மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று ஆவன செய்ய வலியுறுத்தல்!
- நாடே வியந்து போற்றும் வண்ணம் தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், துறை தோறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு வித்திட்டு, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் முதலமைச்சர் அம்மாவுக்குப் பாராட்டு!
- தமிழகத்தில் பெண்களின் தேவைகளையும், உணர்வுகளையும் உணர்ந்து, அவர்களின் மாண்பையும், மரியாதையையும் போற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து, மகளிர் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியும், பாராட்டும்!
- 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வாக்காளர்களுக்கு உறுதி அளித்தபடி, தமிழ் நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றியதற்கும்; உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, தமிழகத்தில் 2,42,160 கோடி ரூபாய்க்கான புதிய முதலீட்டிற்கு வழிவகை செய்தமைக்கும் முதலமைச்சர் அம்மாவுக்குப் பாராட்டு!
- இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழர்களின் பெருமையையும், ஆற்றலையும் இந்த நூற்றாண்டில் உலகறியச் செய்தவருமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றி சிறப்புப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்க ஆணையிட்டிருக்கும் முதலமைச்சர் அம்மாவுக்குப் பாராட்டு!
- தமிழக மக்கள் நலன் மீது சிறிதும் அக்கறை இன்றி, தங்கள் குடும்பத்தினரின் சுயநலத்திற்கென அரசியலில் மக்களை பலிகடாவாக்கி, தொடர்ந்து வளம்பெறத் துடிக்கும் தீய சக்தியும், அதன் வாரிசுகளும் தலையெடுத்திடா வண்ணம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற அறைகூவல்! 2014 - நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதிய சரித்திரச் சாதனை படைத்தமைக்கு முதலமைச்சர் அம்மாவுக்கு பாராட்டு!
- 2016-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியைப் பெறும் வகையில், தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு அம்மாவுக்கு முழு அதிகாரம் வழங்குதல்!
- 2016-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட அம்மாவின் மேலான வழிகாட்டுதலின்படி, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் களப் பணியாற்றிட சூளுரை!












Click it and Unblock the Notifications