அடேங்கப்பா அதிமுக.. ஆன்லைனில் 35,000 பேர் மெம்பராகி விட்டனராமே...!
சென்னை: அதிமுகவின் இணையதளம் மூலம் இதுவரை 35,000 பேர் உறுப்பினர்களாகியுள்ளனராம்.
அதிமுக இணையதளம் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டது. அதன் பின்னர் அதை முடக்கி வைத்து பின்னர் புதுப்பித்தனர்.
புதிய பொலிவுடன் செயல்படும் அதிமுக இணையதளத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறுகிறது. இதன் மூலம் இதுவரை 35,000 பேர் சேர்ந்துள்ளனராம்.

இது நெட் காலமய்யா...
இது இணையதள காலம். பேஸ்புக், டிவிட்டர் என்று சகலரும் கலகலப்பாக்கி வருகின்றனர் வாழ்க்கையை.

அரசியல் கட்சிகளுக்கும் நோய் பரவியது
இந்த சமூக வலைத்தள நோய் இப்போது அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் வெகுவாக பீடித்துள்ளது.

கருணாநிதி முதல் சாதாரண கரட்டாண்டி வரை
திமுக தலைவர் கருணாநிதி முதல் சாதாரன பொது ஜனம் வரை பேஸ்புக் கணக்கு இல்லாதவரையும், டிவிட்டர் கணக்கு இல்லாதவரையும் பார்க்கவே முடியவில்லை.

படித்தவர்களைக் கவர அதிமுகவின் ஆன்லைன் மெம்பர்ஷிப்
இந்த நிலையில் அதிமுகவில் படித்தவர்களையும் அதிக அளவில் சேர்க்க அக்கட்சியின் www.aiadmk.com என்ற இணையதளத்தின் மூலம் உறுப்பினராக வழி செய்ய்பட்டுள்ளது.

ஒரு மாதத்தில் 35,000 உறுப்பினர்கள்
இதைப் பயன்படுத்தி தற்போது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35,000 பேர் கட்சியில் இணைந்துள்ளனராம்.

எஸ்.எம்.எஸ். அனுப்புவோமுகங்க..
மேலும் படித்த இளைஞர்களுக்கு பதிவு செய்தால், எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல், ஜெயலலிதா பிரசாரம், வேட்பாளர் விவரம் உள்ளிட்டவற்றையும் அனுப்பி வைக்கின்றனர்.

வாட்ஸ் ஆப்பும்...
மேலும் தற்போது இளைஞர்கள் மத்தியில் படு பிரபலமாக உள்ள வாட்ஸ் ஆப் சேவையையும் பயன்படுத்தி வாலிபர்களை வசீகரிக்கிறது அதிமுக.

இணையப் பிணைப்பு
இணையத்தின் மூலம் இளைஞர்கள், இளம் பெண்கள், படித்தவர்களை அதிமுகவுடன் பிணைப்பதே தங்களது நோக்கம் என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications