காவிரி: பாஜக, கர்நாடகாவுக்கு காவடி தூக்குவதை அதிமுக கைவிட வேண்டும்- துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் பாஜகவிற்கும், கர்நாடகத்திற்கும் காவடி தூக்குவதை அதிமுக கைவிட வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கும் கர்நாடகத்திற்கும் காவடி தூக்குவதை அதிமுக அரசு கைவிட வேண்டும் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுவரை தமிழக அதிமுக அரசு சார்பில் வலுவான எதிர்ப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டிவருகிறார்கள்.

இந்நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாகூசாமல் பேசும் அமைச்சர்

நாகூசாமல் பேசும் அமைச்சர்

அந்த அறிக்கையில், காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்திற்கு மறக்கவும், மன்னிக்கவும் முடியாத அடுக்கடுக்கான பல துரோகங்களை அடுத்தடுத்து செய்துவிட்டு, இன்றைக்கு விவசாயிகளை வேதனைத்தீயில், அ.தி.மு.க. அரசு தள்ளி விட்டுள்ளது. ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "அரசின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளராக" இருந்து கொண்டு, "மு.க.ஸ்டாலின் சட்டம்- ஒழுங்கைக் கெடுக்கவும், ஆட்சியைக் கலைக்கவும் காவிரிப் போராட்டத்தில் அரசியல் செய்கிறார்", என்ற நகைச் சுவையான குற்றச்சாட்டை நாகூசாமல் முன் வைத்து, தமிழகம் முழுவதும் காவிரிக்காக வெற்றிகரமாக நடைபெற்ற தன்னெழுச்சியான முழு அடைப்புப் போராட்டத்தையும், சாலை மறியல்களையும் கேலி செய்திருக்கிறார்.

தலைமை நீதிபதி தீர்ப்பு

தலைமை நீதிபதி தீர்ப்பு

மக்களின் ஜனநாயகரீதியிலான அறப்போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து, "தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்படும், பொறுமையாக இருக்க வேண்டும்", என்று உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியே கூறியிருக்கின்ற நிலையில், அ.தி.மு.க. அமைச்சரும், துணை முதலமைச்சரும், முதல்- அமைச்சரும் தமிழ்நாட்டில் நடக்கும் காவிரிப் போராட்டங்களை தங்களின் சுயநலனுக்காகவும், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் திரித்தும், பழித்தும் பேசிவருவது தமிழகத்திற்கு செய்யும் முதல் துரோகம்.

திமுக சார்பில் கண்டனங்கள்

திமுக சார்பில் கண்டனங்கள்

அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமல்ல, நேற்றைய முன் தினம் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் முன்னறிவிப்பின்றி கலந்து கொண்டு பேசியிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "1974-ல் காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறிவிட்டது தி.மு.க", என்று தொடர்ந்து கர்நாடக மாநிலம் எடுத்துவைத்து வரும் அதே வாதத்தை, தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் காவிரி நதிநீர் உரிமை மீட்புக்காக உயிரைத் துச்சமென மதித்துப் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், கர்நாடகத்திற்கு உதவிடும் வகையில் பேசியிருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனங்கள்.

முதல்வரின் பேச்சு

முதல்வரின் பேச்சு

அதிலும் குறிப்பாக, "சர்க்காரியா கமி‌ஷனுக்கு பயந்து புதுப்பிக்கத் தவறி விட்டது", என்று முதலமைச்சர் ஒரு அப்பட்டமான கோயபல்ஸ் பிரச்சாரத்தைச் செய்திருக்கிறார். முதலில் காவிரி பற்றி பேசும் முன்பு, காவிரிப் பிரச்சினையைப் பற்றிய விபரங்களை நன்கு படித்துத் தெரிந்து கொண்டு அல்லது அதிகாரிகளிடம் ஆலோசித்து அறிந்து கொண்டு பேசியிருக்கவேண்டும். இப்படி அரையும் குறையுமாகப் பேசியிருப்பது முதல் அமைச்சர் பதவிக்கு அழகல்ல.

தீர்ப்பை படியுங்கள்

தீர்ப்பை படியுங்கள்

1924 காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1974-ல் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் அல்ல என்பதை தவறாமல் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வாதத்தை கர்நாடக மாநிலம் மட்டுமே திரும்பத் திரும்ப எடுத்துவைத்து வருகிறது. தமிழ்நாட்டில் அதே கருத்தை கர்நாடகத்தின் ஊதுகுழல் போல அ.தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பிலேயே "1924-ம் ஆண்டு ஒப்பந்தம் இப்போதும் செல்லும். அந்த ஒப்பந்தம் 1974-ல் காலாவதியாகி விட்டது என்ற கர்நாடக அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது", என்று தெளிவுபடுத்தி விட்டுத் தான் காவிரி இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதை அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

அரசின் சொத்தை வாதம்

அரசின் சொத்தை வாதம்

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், காவிரி நடுவர்மன்றத் தலைவராக இருந்து அளித்த தீர்ப்பை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படித்துப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் யாருடைய சுயலாபத்திற்காக அதை மாற்றித் திரித்துப் பேசத்துடிக்கிறார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். முதல்-அமைச்சர், மத்தியில் உள்ள பா.ஜ.க.விற்கு மட்டுமல்ல, கர்நாடகவில் உள்ள பா.ஜ.க.விற்காகவும் இதுபோன்ற சொத்தையான வாதத்தை முன்வைத்துப் பேசி, அவர்களுக்கு நேரடியாகவே உதவிட முடிவு செய்திருப்பது, தமிழகத்திற்கு இழைக்கும் பெரிய அநீதி.

தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள்

தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள்

இந்த அநீதியைத் தமிழக மக்கள், குறிப்பாக விவசாயப் பெருமக்கள் ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, சிறிது கூடப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமின்றி தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோது, 1976 பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்டு, ஒரு புகாரைக்கூட நிரூபிக்க முடியாமல் போய்விட்ட உப்புசப்பில்லாத, ஒருவித பயனுமற்ற சர்க்காரியா கமி‌ஷனுக்கும், 1974ல் காலாவதியாகாத காவிரி நதி நீர் ஒப்பந்தத்திற்கும் முடிச்சுப்போடுவது ‘மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முயற்சி' என்பதை, தன் எஜமானர்களான மத்திய பா.ஜ.க.வையும், கர்நாடக மாநில பா.ஜ.க.வையும் குளிர்விக்கும் முயற்சியில் மறந்து விட்டார் முதல் அமைச்சர் எடப்பாடி.

மழுங்கடிக்கும் முயற்சி

மழுங்கடிக்கும் முயற்சி

எனவே, கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து, கழகத்தின் மீது குறைசொல்லி, பொய்களை எடுத்துப் பேசியிருப்பது முதல்-அமைச்சர் பதவிக்குத் தகுதி உடையது தானா என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டும். மக்களின் ஜனநாயக ரீதியான காவிரிப் போராட்டத்தின் முனையை மழுங்க வைத்து திசைதிருப்ப, ஏதாவது ஒரு வகையில் தி.மு.க. மீது வீண் பழி சுமத்தி, மத்திய பா.ஜ.க. அரசுக்கும், கர்நாடக பா.ஜ.க.விற்கும் எந்த வகையில் உதவுவது என்று நீண்ட ஆலோசனை செய்து, சுயநல அடிப்படையில் உருவாக்கப்பட்ட சதித்திட்டம் மட்டும் இருவரின் பேச்சுகளில் எதிரொலிக்கிறது. இதுவே, அமைச்சர் ஜெயக்குமாரின் கைவந்த கலையான புழுதி வாரித்தூற்றுதலிலும் தெரிகிறது.

தேவையில்லாத பேச்சுகள்

தேவையில்லாத பேச்சுகள்

ஆகவே, காவிரி நதி நீர் பிரச்சினையில் மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு துணிச்சல் இல்லை என்றால், தார்மீகப் பொறுப்பேற்று முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்களும் பதவி விலக வேண்டுமே தவிர, தமிழகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டமான காவிரிப்போராட்டத்தை கேலிசெய்து, தி.மு.க. மீது உண்மைக்குப் புறம்பான, அற்பத்தனமான தகவல்களைப் பரப்பி கழகமும், தலைவர் கலைஞரும் காவிரி உரிமைக்காக நிகழ்த்திய சாதனைகளை எள்ளி நகையாடி, தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் ஊழல், கொள்ளையிலிருந்து தப்பிக்கவும், பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் காவிரி நதி நீர் பிரச்சினையில் பா.ஜ.க.விற்கு காவடி தூக்கி, தமிழகத்தை பாலை வனமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று காவிரி தீரத்து விவசாயிகளின் சார்பில் எச்சரிக்கை செய்திட விரும்புவதாக துரைமுருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+