அதிமுக - சிங்கம், திமுக - சூது கவ்வும், ம.ந.கூ - நானும் ரவுடிதான்!: விந்தியா கமெண்ட்
சென்னை: 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் களம் காணும் கட்சிகள் பற்றி சினிமா பட டைட்டில்களை வைத்து கமெண்ட் அடித்துள்ளார். அதிமுகவை சிங்கம் என்று கூறும் விந்தியா, திமுகவை சூது கவ்வும் என்றும், மக்கள் நலக்கூட்டணியை நானும் ரவுடிதான் என்று வர்ணித்துள்ளார்.
பாஜக அணியை ஜில் ஜங் ஜக் என்று தலைப்பிட்டுள்ள விந்தியா, பாட்டாளி மக்கள் கட்சியை வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று பெயர் சூட்டியுள்ளார். மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்த உடன் மக்கள் நலன் மாயமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார் விந்தியா.
அதிமுகவின் ஸ்டார் பேச்சாளர்கள் பல முனைகளிலும் எதிர்கட்சியினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். விந்தியா தன் பங்குங்கு சங்கு ஊதியுள்ளார் படியுங்களேன்.

பரமார்த்த குரு அணி
மனைவியையும் நாட்டையும் சூதாட்டத்தில் இழந்துவிட்டு நின்றவர்கள்தானே பஞ்சபாண்டவர்கள். இவர்களை பாண்டவர்கள் என்று சொல்வதற்கு பதிலாக பரமார்த்த குருவும் சீடர்களும் என்று சொல்வது சாலப் பொருத்தமாக இருக்கும்.

கிங் ஆ சங்கா?
மக்கள் நலக்கூட்டணிக்குள் விஜயகாந்த் நுழைந்ததுமே அந்த அணியில் மக்கள் நலன் பலியாகிவிட்டது. அவர் 'கிங்'கா அல்லது அவரது கட்சிக்கு சங்கா என்பது இந்தத் தேர்தலில் தெரியவரும்.

சரத்குமார்
விமர்சனம் செய்தவர்களையும் விருந்தாளியாக பார்ப்பது அம்மா வின் குணம். அதனால்தானே அவரை உலகமே அம்மா என்கிறது. எனவேதான் சரத்குமார் மீண்டும் அதிமுக அணிக்கு வந்திருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
திமுக - சூது கவ்வும். பாஜக - ஜில் ஜங் ஜக்.. திருவிழாவில் காணாமல் போன குழந்தை. மக்கள் நலக் கூட்டணி - ‘நானும் ரவுடிதான்'.. பரோட்டா மாஸ்டரை கராத்தே மாஸ்டர் என நம்பும் கும்பல். பாமக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று கூறியுள்ளார் விந்தியா.

சிங்கம்
அதிமுக - சிங்கம்.. மக்களால் அம்மா, மக்களுக்காக அம்மா. 234 தொகுதிகளில் அதிமுக நிச்சயம் வெல்லும் என்கிறார் விந்தியா. இவரது ஆருடம் பலிக்குமா? மே 19ல் தெரிந்து விடும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications