18 எம்எல்ஏக்கள் தொடர்ந்து முரண்டு.. தொடரும் சமாதான முயற்சி.. பழனிச்சாமிக்கு நாளை ஆதரவளிப்பார்களா?
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் 18 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை 18 எம்எல்ஏக்கள் எதிர்த்து வருகின்றனர். நாளைக்கு சட்டசபையில் இந்த 18 பேரும் முதல்வருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடர்ந்து சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
10வது நாளாக இன்றும் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவி ஏற்கும் போது கூவத்தூரில் இருந்து அனைத்து எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர்.
ஆனால் அப்போது 18 எம்எல்ஏக்கள் மட்டும் வரவில்லை. அவர்கள், தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழனிச்சாமிக்கு ஆதரவளிக்க மறுத்து முரண்டு பிடித்து வருகின்றனர்.

சமாதான முயற்சி
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்ற பிறகு கூவத்தூர் வந்து இந்த 18 எம்எல்ஏக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. என்றாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் இன்று காலை 7 மணி முதல் அவர்கள் 18 பேரிடமும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்யும் முயற்சி ஈடுபட்டுள்ளனர்.

யாருக்கு ஆதரவு
இந்நிலையில், நாளை கூடவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தில் இந்த 18 எம்எல்ஏக்களும் பழனிச்சாமிக்கு ஆதரவளிப்பார்களா அல்லது நடுநிலை வகிப்பார்களா அல்லது பகிரங்கமாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்று அறிவித்துவிடுவார்களா என்பது நாளைதான் தெரிய வரும்.

மக்கள் எதிர்ப்பு
இதனிடையே, நேற்று பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றுவிட்டு கூவத்தூர் மீண்டும் சென்ற போது, அப்பகுதி மக்கள் சாலையில் நின்று பழனிச்சாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

4வது நாளாக 144
கூவத்தூர் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பைக் கட்டுப்படுத்த ரிசார்ட் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4வது நாளாக தொடர்ந்து இன்றும் 144 தடை உத்தரவு அந்தப் பகுதியில் அமலில் உள்ளது.

தனியார் பாதுகாப்பு
போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் அதே வேளையில், சசிகலா உறவினர்களால் போடப்பட்டுள்ள தனியார் பாதுகாப்பு குழுவினரும் ரிசார்ட்டை சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரிசார்ட்டுக்குள் யாரும் சென்றுவிட முடியாத அளவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.
-
விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications