பிரச்சாரத்தில் வெயிலில் சுருண்டு விழுந்து அதிமுக நிர்வாகி பலி
நாகை: நாகை அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு சென்ற ஆளுங்கட்சி நிர்வாகி வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த ஆண்டு கோடை காலம் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசி மக்களை வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோபாலுக்கு ஆதரவாக அக்கட்சியினர் வெயிலில் பிரச்சாரம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்து உள்ள தில்லைவிளாகம் ஊராட்சி அதிமுக கிளை செயலாளராக இருந்த பொன்முடி(56) கட்சியினரோடு சேர்ந்து தில்லைவிளாகம் பகுதியில் தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது சுட்டெரித்த வெயிலை தாங்க முடியாமல் பொன்முடி மயக்கம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்தார். அவருக்கு பேபி என்ற மனைவி, ஆசைத்தம்பி, சிற்றரசு ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications