"போடுங்கம்மா ஓட்டு"... தூத்துக்குடியில் தேர்தல் சுறுசுறுப்பு.. விறுவிறுப்படையும் அதிமுக பிரசாரம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவினர் சுறுசுறுப்பாக இறங்கி விட்டனர். தெருத் தெருவாக வீதி வீதியாக சென்று அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அந்தோணி கிரேசி வீதிவீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்த சசிகலாபுஷ்பா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் தூத்துக்குடி மாநகராட்சி பொறுப்பு மேயராக சேவியர் பதவி வகித்தார்.

செப்டம்பர் 18ல் தேர்தல்
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தது.

அந்தோணி கிரேசி
இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக அந்தோணி கிரேசி அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது பிரசாரத்தைத் தொடங்கி விட்டார்.

சிவன் கோவிலிலிருந்து
தூத்துக்குடி சிவன்கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார் கிரேசி. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஆகியோருடன் இணைந்து பிரச்சாரத்தை துவங்கிய மேயர் வேட்பாளர் அந்தோணிகிரேசி தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய வீதிகளில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

உற்சாகத்தில் அதிமுக
நிச்சயம் நமக்குத்தான் வெற்றி என்ற பெருமிதத்துடன் இப்போதே அதிமுகவினர் பிரசாரத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications